செலவில்லாத விவசாயத்திற்கு அழைப்பு:

கோவையில் மீண்டும் ஒரு பசுமை புரட்சி கருத்தரங்கில் பங்கேற்கிறார் சுபாஷ் பாலேக்கர்

பிப்ரவரி 24,2008,02:30
கோவை: 'வினை விதைப்பவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்...' என்ற பழமொழியும் இப்போது பொய்த்துப் போனது. எதை விதைத்தாலும் வேதனையை அறுவடை செய்வதே விவசாயிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த ஓராண்டில் இந்தியாவில் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அரசே சொல்லும் புள்ளி விபரம். இத்தனைக்கும் கடந்த ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு உர மானியமாக ஒதுக்கப்பட்ட தொகை, ரூ.38 ஆயிரம் கோடி.

ஈரியோபைடு, வாடல் நோய் என பயிர்களைத் தாக்கும் நோய்களின் படையெடுப்பு குறையவில்லை. தண்ணீருக்காக பக்கத்துத் தோட்ட விவசாயியுடன் துவ ங்கிய சண்டை, இப்போது பக்கத்து மாநிலம் வரைக்கும் பஞ்சாயத்தில் நிற்கிறது. வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டே இருக்கின்றன; புதிது புதிதாக பயிர் ரகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால், விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் வாடிய பயிராக மண்ணில் சாய்ந்து கொண்டே போகிறது.

காடுகளெல்லாம் அழிக்கப்பட்டு, 'கான்கிரீட் காடு'களாக உருமாற, பயிர்கள் விளைந்த இடங்களில் பளபளக்கும் அடுக்கு மாடிகள் முளைக்கின்றன. விவசாயம்தான் செய்வேன் என்று வீம்பு பிடிக்கும் விவசாயிக்கு, கடனும், கவலையும் கழுத்தை நெரிக்கின்றன. தும்பைப்பூ நிறத்தில் வேட்டி, சட்டையில் சின்னக் கருப்பு விழுந்தாலே துவண்டு போகும் விவசாயிக்கு, கடன் தொல்லையால் கவுரவம் கவிழும் போது உயிரை மாய்த்துக் கொள்வது உசிதமாகத் தெரிகிறது. விளைவு, விவசாயிகளின் தற்கொலை ஆண்டுக்காண்டு அதிகரிப்பு.

பத்தாயிரம் ரூபாய் விளைச்சல் பார்க்க, ஏழாயிரம் ரூபாய் செலவழிக்கும் விநோதத்தை அரங்கேற்றும் முட்டுவளிச் செலவுகள். களை எடுக்க ஆள் கிடைக்காத அவலம், தண்ணீர் பாய வேண்டிய நாளில் காய்ந்து கிடக்கும் கால்வாய், கடனுக்கு உரம் வாங்க, கடைக்காரனிடம் வரம் கேட்கும் வருத்தத்துக்குரிய வாழ்க்கை... இப்படி விவசாயம் என்பதே வேதனைகளின் கலவையாக மாறிப்போனதன் காரணம் என்ன...?.

தந்தையும், தாத்தாவும் இதே மண்ணில்தானே ஆயிரமாயிரமாய் விளைச்சல் பார்த்தார்கள்; ஆனந்தமாய் வாழ்க்கை நடத்தினார்கள் என்று அனுபவ பரிசோதனையும், ஆன்ம விசாரணையும் செய்து பார்த்தால், எந்த விவசாயிக்கும் ஒரு உண்மை தெரியவரும். தவறு மண்ணின் மீதில்லை, மனசுக்குள் இருக் கிறது என்று. மண்ணையெல்லாம் ரசாயன உப்புக்களின் உப்பளங்களாக மாற்றி விட்ட தவறுகளை யார் செய்தது? உள்ளே இருந்த கோடிக்கணக்கான நுண்ணுயிர்களை கண்ட உரத்தையும் போட்டு மண்ணோடு மண்ணாக சமாதியாக்கிய சாதனையை யார் நிகழ்த்தியது?மேய்ப்பதற்கு ஆளில்லை என்று பராமரிக்க முடியாமல் நாட்டுப்பசுவை வந்த விலைக்கு ஓட்டி விட்டது நினைவுக்கு வருகிறதா? இயற்கைக்கு எதிரான எல்லா விஷயங்களையும் செய்து விட்டு, இப்போது செயற்கையாக அழுது புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது...?.

இந்த வேதனைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன?...கீதைப்படி சொல்வது என்றால், நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை எல்லாம் நன்மையாகட்டும். நடப்பது நன்மையாக ஒரு வழி இருக்கிறது...முட்டுவளிச் செலவுகள் இல்லாத, கவலைகளைத் துரத்தியடிக்கும் புதிய வேளாண் மந்திரமான 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்தான் அது. நவீன இயந்திரங்கள், விளை நிலங்களை கீறிப்போடும் கனரக வாகனங்கள், விளம்பரங்களோடு பவனி வரும் வீரிய ரகங்கள், மூடை மூடையாக ரசாயன உரங்கள், கூட்டம் கூட்டமாய் வேலையாட்கள் என விவசாயிகளை பல முனைகளில் தாக்கி 'கொல்லும்' விவசாயத்துக்கு முடிவு கட்டி, 'வெல்லும் விவசாயம்'தான் இந்த 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்.

தண்ணீரைப் பாய்ச்சி, கண்ணீரை அறுவடை செய்யும் விவசாயிகள், ஆனந்தத்தை அறுவடை செய்வதற் கான செலவில்லா விவசாயம்தான் இந்த புதிய முறை விவசாயம். உண்மையில் சொல்லப்போனால், மூதாதையர் நம் மண்ணோடு சேர்த்து நமக்கு விட்டுச் சென்ற சொத்துதான் இது. அதை உங்களுக்கே நினைவூட்டி, இழந்து போன சந்தோஷங்களை மீட்டுக் கொடுக்கும் அதிசயம்தான் இந்த செலவில்லா விவசாய முறை. இந்த அதிசயத்தை கோவை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் அற்புத நிகழ்ச்சி, கோவை கொடிசியா அரங்கில் மார்ச் 22லிருந்து 25 வரை நான்கு நாட்கள் நடக்க இருக்கிறது.

நொய்யலுக்கு மறு உயிர் கொடுத்து, ஏராளமான குளங்களில் ஈரத்தை நிறுத்தி வைத்த கோவை 'சிறுதுளி' அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இவர்களுடன் தினமலர் நாளிதழும் கரம் கோர்க்கிறது. எதற்காக? நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கத்தான். விரக்தியின் விளிம்பில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இந்திய விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக, இன்னொரு பசுமைப் புரட்சிக்கு விதை போட்ட கனவு நாயகனான, 'உழவர்களின் கலாம்' சுபாஷ் பாலேக்கர் பங்கேற்கும் அரிய நிகழ்வுக்கு உங்களை அன்போடு அழைக்கிறது 'சிறுதுளி' அமைப்பு.

எல்லாம் சரி! யார் இந்த சுபாஷ் பாலேக்கர்?...அவரது அறிமுகம் நாளை! விவசாயிகளே இனியும் உங்கள் உழைப்பு வீணாக வேண்டாம். நம்மிடம் இருக்கும் இயற்கை வரங்களை கொண்டே முட்டுவளி செலவு எதுவும் இல்லாமல், தரமான விவசாயத்தை பார்க்க முடியும். இதற்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சிக்கு இப்போதே தயாராகுங்கள்....

http://www.dinamalarbiz.com/News_large.asp?News_id=156&new=2&pg=1

எம் ஏ படிப்பில் ௭ பதக்கங்கள் ஆதி திராவிட மாணவர் சாதனை

Posted by Picasa


தினமலர் புதுவை 22-2-2008 பக்கம் 9

இந்திய சயன்ஸ் காங்கிரஸ் விவசாயத்துறைக்கு....

இந்திய சயன்ஸ் காங்கிரஸ் விவசாயத்துறைக்கு ஒரு முழு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இது பற்றி கூறும்போது ஜனவரி 3-7 இல் விசாகையில் இ.ச.க வின் 95 ஆம் அமர்வில் பிரதமர் தெரிவித்த கவலைகளை இது கவனத்தில் கொண்டுள்ளது என்றார். இதன்படி ஒரு தேசிய விவசாயிகள் பங்கு கொள்ளும் ஆராய்சி இணையம் உருவாக்கப்படும். எப்போதும் பசுமையாக இருக்க திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயிகள், கொள்கை உருவாக்குவோர், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் எல்லா வேளான் கல்லூரிகளும் இதில் பங்கு வகிப்பர். இது மட்டும் இன்றி இஸ்ரோ ஐகார் ஐஐடிகள், போன்ற நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு.
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் "மேலும் வருமானம் தேடி ஆண்கள் நகர்புறங்களுக்கு செல்வதால் விவசாயம் பெண்கள் சார்ந்ததாக ஆகி வருகிறது. ஆகவே உணவு பாதுகாப்பு என்பது பெண்களின் பலத்தை அதிகரிப்பதில் உள்ளது. திட்டத்தில் பெண் விவசாயிகளுக்காக 9 அம்ச துணை திட்டம் உண்டு என்றார்.
http://www.deccan.com/chennaichronicle/City/CityNews.asp

தொழிலில் புதுமை புகுத்தும் பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பத்மஸ்ரீ

அமெரிக்காவில் புதுமைகள் மூலம் சாதனை படைக்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த பத்மஸ்ரீ வாரியரும் இடம் பெற்று உள்ளார்.
மலையாளியாக பிறந்து ஆந்திராவில் வளர்ந்தவர். தில்லி ஐஐடி யில் ரசாயன இஞ்சினீரிங்கும் கார்னெல் பல்கலையில் எம் எஸ் உம் பெற்றார். கடந்த ஆண்டு வரை மோட்டொரோலோ வில் தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாக பணி புரிந்தார். இப்போது சிஸ்கோ. இவரது புதுமையான அணுகு முறைகள் மூலம் நிறுவனங்களின் லாபம் அதிகமாயிற்று. புதுமை மட்டும் அல்லாது அதிக சம்பளம் பெறும் பட்டியலிலும் இவர் இருக்கிறார். பிரபல அமெரிக்க பிங்க் பத்திரிகை வெளியிட்ட புதுமையான அணுகு முறையால் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் 15 பேரில்
இவர் உள்ளார்.

தினமலர் 19-02-2008 புதுவை பக்கம்14

பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு

விசில் அடித்து மாணவர்களை திரட்டும் தலைமை ஆசிரியர்.
மே.வங்கம் மிட்னாபூர் அருகே காடல் அருகே சாதிசாக் கிராமம். ஆரம்பப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் பிரணாய் கிருஷ்ணா பட்டாச்சாரியா. 7 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பு ஏற்றவர். தொடர்ந்து மாணவர் வருகையை சோதித்ததில் சாவகாசமாக மதியம் வருகிறார்கள் என தெரிந்தது. காரணம் விசாரித்ததில் அனைத்து மக்களும் படிப்பறிவு இல்லாதவர்கள், மணி பார்க்கக்கூட தெரியாது, கடிகாரமும் கிடையாது என கண்டு பிடித்தார். இதை சரி செய்ய தினமும் காலை 9-30 க்கு சைக்கிளில் கிராம தெருக்களில் விசில் ஊதியபடி வலம் வருவார். மக்கள் நேரம் ஆகி விட்டது என உணர்ந்து மாணவர்களை தயார் செய்து அனுப்புவர். இப்படி மெனக்கெடுவது பள்ளியில் படிக்கும் சுமார் 200 மாணவர்களை நெகிழச்செய்துள்ளது. தாங்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த வேலையை தாமே செய்ய உறுதி கொண்டு உள்ளனர்.
குழந்தைகள் தினமும் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு தயார் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வானொலியில் தினசரி காலை "பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு" என்ற பாடலை ஒலிபரப்புகின்றனர்.
புதுவை தினமலர் 19-02-2008 பக்கம் 12

இயற்கை உரங்களால் நெல் விளைச்சல் அதிகரிப்பு

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் அதிக நெல் பயிரிடும் பகுதி. இங்குள்ள வடக்கன்சேரி பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள் 20 பேர் வடக்கன்சேரிபாத சேகர சமிதி என்ற அமைப்பை துவக்கியுள்ளனர். பல ஆண்டுகளாக நெல் பயிரிட்டுவரும் இவர்கள் இந்த முறை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை கைவிட்டு இயற்கை உர சாகுபடிக்கு மாறினர். இப்போது அருவடை நடக்கிறது. ஏக்கருக்கு 4 டன் விளைந்துள்ளது. (வழக்கமாக 3.5 டன்) இதை கேரளாவை சேர்ந்த போப்ஸ் நிறுவனம் அதிக விலையாக குவிண்டாலுக்கு ரூ.1125 கொடுத்து வாங்குகிறது. (இரண்டு வருடம் முன் 420, போன வருடம் அரசு நிர்ணயித்த ஆதரவு விலை 900.)
விவரமான தகவல் : தினமலர் புதுவை பதிப்பு 20-02-2008 பக்கம் 2

தமிழில் எழுத

டும் டும் டும்!
போன ௧௨ தேதி முதல் தமிழில் நேரடியாக எழுத ப்ளாகர் வசதி செய்துள்ளது.
Settings |பேசிக்ஸ் பக்கத்தில் சென்று இந்த வசதியை இயலுமைப்படுத்துங்கள்!
மேலும் படிக்க
http://help.blogger.com/bin/answer.py?answer=58226

12 தேதி என்பது தமிழ் எண்களாக வந்துள்ளதை காண்க!

இரும்பு பட்டறையில் இஸ்ரேல் மாணவர்..

மூணாருக்கு சுற்றுலா வந்தவர் யோனி (29).இஸ்ரேல் நாட்டவர். அனிமேஷன் படிக்கிறார். அவர் தோழி இனபலுடன் சுற்றுலா வந்தார்.
மூணாரில் சுப்பிரமணிய சாமி கோவில் செல்லும் வழியில் இரும்பு பட்டறைப்பணிகளை கூர்ந்து கவனித்தார். பணி அவரை கவர்ந்ததால் பட்டறை உரிமையாளருக்கு குரு தட்சிணை வைத்து பணிகளை கற்று வருகிறார். அடுப்பையும் சூட்டையும் பொருட்படுத்தாமல் ஒரே நாளில் கத்தி செய்ய கற்றுக்கொண்டார்.

நம்மில் எவ்வளவு பேருக்கு இப்படி ஆர்வம் இருக்கிறது?

தினமலர் புதுவை 12-02-2008 பக்கம் 7

நல்ல சேதி 07-02-2008

தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவரின் கதை
எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் வடிவமைத்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனை சூடு பறக்கிறது.

அவதேஷ் மிஸ்ரா...எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இந்த நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து வேறு வேலைக்கு முயற்சி செய்தார். புதுவகையில் ஒரு ஸ்கூட்டர் தயாரிக்கும் எண்னம் அவருக்கு தோன்றியது. வேலை தேடலை விட்டு வெளிநாடுகளில் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களை நேரடியாக பார்க்க முடிவு செய்தார். சீனா, ஜெர்மனி நடுகளுக்கு சென்றார்.

ஜெர்மனியில் ஜி.பி.செஸ்கெர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சீனாவின் ஷாங்காயில் ஸ்கூட்டர்கள் தயாரிக்கிறது. அந்த நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கூட்டு முயற்சியில் இந்தியாவில் அவற்றை தயாரிக்க உடன்படிக்கை ஏற்பட்டது. 50 லட்சம் முதலீட்டில் ஜிஈ ஆட்டோ துவக்கப்பட்டது. டேராடூனில் சலகுயி தொழிற்பேட்டையில் தொழிற்சாலை உருவானது. ஜி பைக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது.

இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை ஒட்டி பீஹார் பாட்னாவில் 1.5 கோடியில் இன்னொரு தொழிற்சாலை உருவானது. இரண்டிலும் சேர்த்து மாதம் 7,500 ஸ்கூட்டர்கள் தயாராகின்றன. இதே போல் மோட்டார் பைக்குகள் தயார் ஆகின்றன. ரகத்தை பொருத்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 முதல் 100 கி.மீ ஒடுகின்றன. சார்ஜ் தீர்ந்தாலும் பெட்ரோலில் பத்து கிமீ செல்ல பாதுகாப்பு வசதியும் உண்டு.

சுற்று சூழலுக்கு ஏற்ற இவை முதல் கட்டமாக உ.பி, ம.பி, பீகார், அஸாம், ஜார்கண்ட் மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. மற்ற மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டங்கள் உள்ளன.தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவரின் கதை
எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் வடிவமைத்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனை சூடு பறக்கிறது.

அவதேஷ் மிஸ்ரா...எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இந்த நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து வேறு வேலைக்கு முயற்சி செய்தார். புதுவகையில் ஒரு ஸ்கூட்டர் தயாரிக்கும் எண்னம் அவருக்கு தோன்றியது. வேலை தேடலை விட்டு வெளிநாடுகளில் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களை நேரடியாக பார்க்க முடிவு செய்தார். சீனா, ஜெர்மனி நடுகளுக்கு சென்றார்.

ஜெர்மனியில் ஜி.பி.செஸ்கெர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சீனாவின் ஷாங்காயில் ஸ்கூட்டர்கள் தயாரிக்கிறது. அந்த நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கூட்டு முயற்சியில் இந்தியாவில் அவற்றை தயாரிக்க உடன்படிக்கை ஏற்பட்டது. 50 லட்சம் முதலீட்டில் ஜிஈ ஆட்டோ துவக்கப்பட்டது. டேராடூனில் சலகுயி தொழிற்பேட்டையில் தொழிற்சாலை உருவானது. ஜி பைக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது.

இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை ஒட்டி பீஹார் பாட்னாவில் 1.5 கோடியில் இன்னொரு தொழிற்சாலை உருவானது. இரண்டிலும் சேர்த்து மாதம் 7,500 ஸ்கூட்டர்கள் தயாராகின்றன. இதே போல் மோட்டார் பைக்குகள் தயார் ஆகின்றன. ரகத்தை பொருத்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 முதல் 100 கி.மீ ஒடுகின்றன. சார்ஜ் தீர்ந்தாலும் பெட்ரோலில் பத்து கிமீ செல்ல பாதுகாப்பு வசதியும் உண்டு.

சுற்று சூழலுக்கு ஏற்ற இவை முதல் கட்டமாக உ.பி, ம.பி, பீகார், அஸாம், ஜார்கண்ட் மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. மற்ற மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டங்கள் உள்ளன.

தினமலர் புதுவை பக்கம் 4

நல்ல சேதி -5 பிப் 6 ,2008

அரவிந்த் கண் மருத்துவ மனையில் செயற்கை விழி ஆபரேஷன்.
உலக அலவில் இந்த சிகிச்சை 200 பேருக்குத்தான் செய்யப்பட்டு உள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் என்பதால் இந்தியர் பலர் தேவை இருந்தும் செய்து கொள்ள முடியவில்லை. அமேரிக்க மருத்துவர் ஆன்டணி ஆல்டேவ் செயற்கைகருவிழி பொருத்த சிறப்பு பயிற்சி அளித்தார். பயிற்சி பெற்றோர் ஒரு மணி நேரத்தில் இதை செய்ய இயலும். இப்போது இதன் செலவு 22 ஆயிரம்தான்.

தினமலர் புதுவை 06-02-2008 பக்கம் 16