டில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஐ.நா கவுரவம் தினமலர் பக்கம் 4 10-1-2008
இது ஐ நா வின் பசுமை பாதுகாப்பு பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காமல் பசுமை பாதுகாப்புக்கு பெரிதும் உதவும் திட்டங்கள் பட்டியலை ஐ நா தயாரித்துள்ளது. அதில் டில்லி மெட்ரோ ரயில் திட்டம் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. மெட்ரோ ரயிலின் தொழில்நுட்பங்கள் சிறப்பாக உள்ளதால் கரியமில வாயு கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முறை பிரேக் போடும்போதும் கரியமில வாயு அதிகமாக வெளியாவாதை தடுக்க டில்லி மெட்ரோ ரயில்களில் ரீஜெனரேட்டிங் டெக்னாலஜி பயன்படுகிறது. இத்தைகைய திட்டங்களுக்கு ஐநா ஊக்கம் தருகிறது. இந்த வகையில் மெட்ரோ ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வெகுமதியை பெருகிறது.
---------------------
ப்ரேக் போடும்போது கரியமில வாயு அதிகம் வெளிப்படுகிறதா? அப்படித்தான் செய்தி. ஆனால் ப்ரேக் போடும்போது மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்றே நினைக்கிறேன்.
நல்ல சேதி 10-1-2008
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
0
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி
நல்ல சேதி 9-1-2008
தினமலர் பக்கம் 8, தேதி 9-1-2008 சொல்கிறார்கள்
சென்னை பல்கலையில் புவி அமைப்பியல் முதுகலை படித்து ஸ்காட்லாந்து நாட்டில் வேலை கிடைத்திருக்கும்
ஜீவன்:
நகைக்கடையில் வேலை பார்க்கும் அப்பா. தனியார் கம்பனியில் அண்ணன் என சாதாரண குடும்பம். கிராம நகராட்சி பள்ளிகளில் படித்தார். சுனாமி தாக்குதலுக்குப்பின் இந்திய கடலோரங்களில் ஏற்பட்ட மாறுதல்களை ஆராய்ச்சி செய்த குழுவில் வேலை பார்த்தார். அப்போது புவி அமைப்பு சம்பந்தமான பல விஷயங்களை "பிராக்டிகலாக" தெரிந்து கொண்டார். இவர் ஜியாலஜி படித்தபோது பலர் கிண்டல் செய்தார்கள்- வேலை எங்கே கிடைக்கப்போகிறது என்று. ஆனாலும் சோர்ந்து போகாமல் படித்து பட்டம் பெற்றார். இபோது ஸ்காட்லாந்து நாட்டில் கடலில் எண்ணை வளம் கிடைக்கிறதா என ஆய்வு செய்யும் வேலை கிடைத்துள்ளது.
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
0
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி
நல்ல சேதி 8-1-2008
மூட்டு மாற்று அறுவை சிகித்சை -சாதனை படைக்கிறது இந்தியா (தினமலர் 8-1-2008 புதுவை பதிப்பு பத்தாம் பக்கம்)
சுருக்கம்: இந்தியாவில் இப்போது ஆண்டுக்கு 50.000 மூட்டு மற்றும் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகித்சை செய்யப்படுகிறது. செலவு செய்யும் வசதியும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் மற்ற நாடுகளை விட திறமை வாய்ந்த அறுவை சிகித்சை நிபுணர்கள் இங்கு அதிகம் உள்ளனர். கட்டணமும் மற்ற நாடுகளை விட குறைவு. ஆகவே வெளி நாட்டினரும் இங்கு வந்து சிகித்சை பெற ஆர்வம் காட்டுகின்றனர். வரும் ஆண்டுகளில் இந்த போக்கு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
0
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் இந்தியா ஒளிர்கிறது
இன்றைய நல்ல சேதி 7 ஜனவரி 2008
சொந்த கிராமத்தின் தாகத்தை தீர்க்க அமெரிக்காவில் வேலை செய்யும் சிறுவன்.
என ஆரம்பிக்கும் செய்தி (தினமலர்-பாண்டிச்சேரி பதிப்பு- ஜனவரி 7, பக்கம் 12) மகாராஷ்ட்ர மாநில அகோலா மாவட்ட பாரஸ் கிராமத்தை சேர்ந்த ருஜுல், 13 வயது, இப்போது அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் படிக்கிறான். அவன் கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. இதை தீர்க்க ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு செய்தான். மற்ற நண்பர்களுடன் ஆலோசித்து பகுதி நேர வேலை செய்து (கார் சுத்தம் செய்வது, ஐஸ்கிரீம், பிட்சா விற்பது) போன்ற வேலைகளை செய்து பணம் திரட்டி வருகிறான். . “தண்ணீருக்காக பெண்கள் பல மைல்கள் தலையில் பானையை சுமந்து சென்றதை பார்த்து இந்த பிரச்சினை பற்றிய சிந்தனை வந்தது. இந்த வேலையில் வெற்றி பெறும் வரை வேலைகளில் ஈடுபடுவேன்" என்கிறான் இவன்.
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
0
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி
பிறர் சமர்ப்பணம்
ஹெல்மெட் போடலையா கட்டு அபராதத்தை' னுதானே கேட்டிருக்கிறோம்...ஆனால்
குஜராத் மாநில போக்குவரத்து காவல்துறையினர் ஒரு நூதனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.......
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
0
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் நல்ல தொடுப்பு
31-12-2007
டிசம்பர் 31.2007
பிரதமர் மன்மோகன் சிங் மூன்று வருடங்களாக "லீவு" எடுக்காமல் வேலை செய்து வருகிறார் என தினமலர் சொல்லுகிறது. மத்திய அரசு விடுமுறை தினங்களில் கூட அவர் உழைக்கிறார். இவரைப் போல எந்த பிரதமரும் நள்ளிரவு வரை பனியாற்றியது இல்லை என்றும் மேலும் தெரிவிக்கிறது.
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
0
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி
இன்றைய நல்ல சேஇ இதுதான்
இன்றைய நல்ல சேதி, கஷ்டப்பட்டு ஒரு வழியாக இந்த வலைப்பூவின் கட்டமைப்பை 90% சரி செய்துவிட்டேன் என்பதுதான்!
இனி தினசரி நல்ல சேதிகள் தொடரும்.
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
0
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி
வலைப்பூக்களுக்கு புதுசுனா
சரி எப்படியோ இங்க வந்துட்டீங்க. கொஞ்சம் தலைகால் புரியலே இல்ல?
ஏதேனும் படிக்கிறீங்க. அட, இது நல்லாயிருக்கேன்னு தோணுது. (சும்மா ஒரு பேச்சுக்குதான்!) அத பத்தி ஒரு விமர்சனம் எழுத தோணுது. (ஏண்டா உனக்கு வேற வேலை இல்லையா, ஐயா நான் பார்த்த வலைப்பூக்களிலேயே இதுதான் பிரமாதம்! இப்படி ஏதோ ஒண்ணு) என்ன செய்யறது?
நீங்க படிச்ச பத்தி கீழேயே காமென்ட்ஸ் அப்படி தெரியுது பாருங்க. அது மேலே சொடுக்கினா (அதாங்க மவுஸால கிளிக் பண்ணா) அடுத்து ஒரு பக்கம் வரும். மத்தவங்க திட்டினது பாராட்டினது எல்லாம் அங்க இருக்கும். அது பாட்டுக்கு வால் மாதிரி (க்கும்) போய்கிட்டே இருந்தாலும் கவலைபடாம வலது பக்கம் பாருங்க. அங்க ஒரு பெட்டி தெரியுதா? மேலே ஆங்கிலத்துல லீவ் யுவர் காமென்ட்ஸ் அப்படி போட்டிருக்கே. அந்த பெட்டில உங்க விமர்சனத்தை உள்ளிடுங்க. தமிழ்ல எழுதறது நல்லது. அதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். முதல் பக்கமே தமிழில் தட்டச்சி பின்னூட்ட ன்னு ஒரு தொடுப்பு கொடுத்திருக்கேனே. அங்க போய் சுலபமா தமிழ்ல எழுதலாம். ammaa ன்னு அடிச்சா "அம்மா" வந்துடும். அப்புறம் அத பிரதி எடுத்து ஒட்ட... அதாங்க காபி பேஸ்ட் .. பண்ணிடலாம்.
மத்தபடி இடது பக்கம் முதல்ல என் இன்னொரு வலைப்பூக்கான தொடுப்பு, கீழே இந்த வலைப்பூல இருக்கற மத்த பதிவுகள் தலைப்புவாரியாக, ஏன் இந்த வலைப்பூ ங்கற ரகசியம், இன்னும் கீழ இதுவரை பதிவு செய்தன் எல்லாம் தேதிவாரியாக, அப்புறம் அடியேனின் சிறு விவரம். அவ்வளவுதாங்க. இதுவரைக்கும் படிச்சதுக்கு நன்றி!
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
2
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் வலைப்பூக்களுக்கு புதுசுனா
நல்ல தொடுப்பு
http://tinyurl.com/34u7q7பு
வலைப்பக்கம் ஆங்கிலத்தில். உற்சாகம் தரும் சில நிகழ்வுகள்.
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
0
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் நல்ல தொடுப்பு
இந்த வலைப்பூக்கு சமர்ப்பிக்க விதிகள்
எல்லா செய்திகளுக்கும் ஒரு அத்தாட்சி வேண்டும். தினசரி மற்ற ஊடகங்களானால் வலை தொடுப்பு இருப்பின் சமர்ப்பிக்கவும். அல்லது "தினமலர் 12-1-2007 தேதி நெல்லை பதிப்பு" போன்ற தகவல் இருக்க வேண்டும். சமர்ப்பிக்கும் செய்தி உண்மையானது என உறுதி கூற வேண்டும்.
தரப்படும் தகவல் தணிக்கைக்கு உட்பட்டது. தணிக்கைக்கு சம்மதம் இல்லையானால் சமர்ப்பிக்காதீர்கள்.
தணிக்கைக்கு காரணம் தரப்பட மாட்டாது.
தரப்படும் தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்று உறுதி ஏதும் இல்லை. இதற்கு காரணமும் தரப்பட மாட்டாது.
வெளிட்ட தகவல் தவறு என தெரிய வந்தால் அது நீக்கப்படும்.
வெளியிட உங்கள் புனை பெயர்களை தரலாம், ஆனால் உண்மை பெயரும் தரப்பட வேண்டும்.
இந்த சமர்ப்பிப்போர் பெயர் தேவையிருந்தால் மட்டுமே வெளியிடப்படும்.
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
3
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் இந்த வலைப்பூக்கு சமர்ப்பிக்க விதிகள்