நல்ல அனுபவம்!

சில வருடங்களுக்கு முன் எனக்கு நிகழ்ந்தது.
என் மகனை சென்னையில் தனியாரிடம் கல்வி பயில சென்னை கொண்டு அமர்த்தினேன். ஒரு சிறு உறைவிடம் வாடகைக்கு எடுத்தோம். மாலை கடையில் பொருட்கள் வாங்கி அதிகம் பழகாத மகனுக்கு ஒரு அனுபவம் வருவதற்காக மயிலை குளத்தருகே கடை வீதி சென்றோம். காய்கறி வாங்க தெருவோரம் இருந்த ஒரு எளிய கிழவியிடம் சென்று அமர்ந்தோம். பெரிசா விலை பேசி வாங்க தெரிந்தவன் போல "இது எவ்வளோ? அது எவ்வளோ" என்றெல்லாம் விசாரித்தோம். கடைசியில் தேவையான அளவு காய்கறி எடுத்துக்கொடுத்து "எடை போட்டு கொடுமா" என்றோம். (எவ்வளவு வேண்டும் என்று எடையில் சொல்லத் தெரியாதே!) சரி எவ்வளவு ஆச்சு? என்றோம். அதற்குள் மனசில் கணக்கு போட்டு 15 ரூபாய் வந்தது என்று தெரிந்து விட்டது. "பதினஞ்சு ரூபா சாமி." 20 ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினோம். கிழவி மீதியாக 8 ரூபாய் கொடுத்தாள். ஓ கணக்கு தெரியவில்லையோ? எப்படிமா என்று ஆரம்பிக்க கிழவி சிரித்துக்கொண்டே "இது போதும் சாமி!" என்றாள்!
கணக்கு தெரிந்துதான் இருக்கிறது. எப்படியும் பேரம் பேசுவார்கள் என்று விலையை சற்று உயர்த்தி சொன்னாள். பேரம் பேசவில்லை என்று தெரிந்ததும் அவள் மனதில் நிர்ணயித்து இருந்த விலை மட்டும் எடுத்துக் கொண்டாள். கூடுதலாக கிடைக்க இருந்த பணத்தை ஏற்க தயாராக இல்லை.
ஏழ்மையிலும் செம்மை!

4 மறுமொழிகள்:

Unknown சொல்வது:

Good Rains are because of people like the vegetable vendors

SRM

திவாண்ணா சொல்வது:

உன்மைதான்!

வல்லிசிம்ஹன் சொல்வது:

அம்பி எழுதின காய்கறி விலைப் பட்டியல் படித்து நொந்த என்மனசுக்கு இதமான விஷயம் சொல்லி இருக்கிறீர்கள் வாசுதேவன். போன வருஷ விலை!!!!

திவாண்ணா சொல்வது:

அட! வாங்க வல்லி அக்கா! இந்த ப்ளாக் ரொம்ப வேலை/ நேரம் எடுத்ததாலும் மத்ததில நாட்டம் போயிட்டதாலும் இதை பதிக்கறதை நிறுத்திட்டேன்.
போன வருஷ விலைகூட இல்லை 4-5 வருஷம் முந்தினது!
எதா இருந்தா என்ன கொஞ்சம் புலம்புவோமே தவிர அதையே செய்துகிட்டுதான் இருப்போம், இல்லையா?