ராஜா ராம் மோகன் ராய்

april 30, 2008

லண்டன் : பிரிட்டனில் அமைந்துள்ள, பிரபல சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராய் சமாதி, 165 ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்தியாவில், சமூக சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர் ராஜாராம் மோகன் ராய். பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பகுதியில், 1833 ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு அங்கு சமாதி அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ராய் மீது, இந்தியர் பலருக்கும் தனி மரியாதை உண்டு. அதனால், பிரிட்டன் செல்லும் போது, ராயின் சமாதிக்கு சென்று வருவர். கடந்த, 20 ஆண்டாக சமாதியை கவனிப்பாரின்றி சிதைந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த, இந்தியர்கள் பலரும் பிரிட்டன் அரசுக்கு மனு அனுப்பினர். ஆனால், பிரிட்டன் அரசு கண்டுகொள்ளவில்லை.இந்த நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஆதித்திய பொத்தார் என்பவர், 35 லட்சம் ரூபாய் நன்கொடை தந்துள்ளார். பிரிஸ்டல் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து, ராயின் சமாதியை புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, ராஜாராம் மோகன் ராய் சமாதியை புதுப்பிக்க 20 ஆண்டுக்கு பின் பணிகள் ஆரம்பமாக உள்ளன.சிங்கப்பூர் தொழிலதிபர், கோல்கட்டாவை சேர்ந்தவர். ராயின் மீதுள்ள மதிப்பால் அவர் நன்கொடை தந்துள்ளார்.பிரிஸ்டலில் உள்ள ராய் சமாதியில், அரியாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அது இப்போது உருமாறி உள்ளது. மேற்கு வங்க பாரம்பரிய முறைப்படி இப்படி அமைக்கப்பட்டுள்ளது. இதையும் புதுப்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

0 மறுமொழிகள்: