அகழ் வாராச்சி

சென்னை : "நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆதிச்சநல்லூர் தொன்மை யை வெளிப்படுத்தவும், அந்த இடத் தை பாதுகாக்கவும், உடனடியாக அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்' என்று தென்மாநில இயக்கத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.



சென்னையில் நேற்று இருவரும் அளித்த பேட்டி: டாக்டர் சேதுராமன்: திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஆதிச்சநல்லூரில், மூன்று ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்பொருள் துறையினால் நடத்தப்பட்ட அகழ் வாராச்சியில் கிடைத்துள்ள சான்றுகள் மூலம், தமிழ் நாகரிகம் உலக நாகரிகத்திற்கு இணையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் 140 ஆண்டுகளுக்கு முன், அகழ் வாராய்ச்சி செய்த ஜெர்மனிய ஆய்வாளர் டாக்டர் ஜாகர், 1903ம் ஆண்டு அப்பகுதியில் ஆய்வு செய்த ஆங்கிலேயே ஆய்வாளர் அலெக்சாண்டர் ரீ ஆகியோர், "திருநெல்வேலி மாவட்டம் தான் தெற்கு ஆசிய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். அவர்கள் நான்காயிரத்துக்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டுபிடித்துள் ளனர்.தமிழ் நாகரிகத்தின் தொன்மை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதும், ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள் ளதாக இப்போது தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆராய்ச்சியை அரசு நடத்த வேண்டும். அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். முதுமக்கள் தாழிகள், பானைகள் போன்ற தொன்மையான பொருட்கள் தினமும் அழிந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் ஆதாரங்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து, உடனடியாக அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சியை மேற் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் மாதம் ஆதிச்சநல்லூரிலிருந்து தென்மாநில இயக்கத்தின் சார்பில் பேரணி நடத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்படும்.



தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன்: மகாராஷ் டிரா, கர்நாடகா மாநிலங்கள் தான் பானை தயாரிப்பில் முன்னோடியாக இருந்தன என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்லியல் துறை மேலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் முதுமக்களின் தாழிகளும், பானை ஓடுகளும், வெண்கலம், மற்றும் மண்டபாண்ட வகைகளும் கிடைத்துள்ளன. அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகள் தமிழ் நாகரிகத்தை மூன்றாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் எடுத்துச் செல்கின்றன. தமிழர்கள் தான் பானை தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினர் என்ற புதிய வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளில் அகழ் வாராய்ச்சி மேற்கொள்ள தனியார் அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அதேபோல் மத்திய அரசும், தனியார் அமைப்புகளும் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட அங்கீகாரம் அளிக்க வேண்டும். அப்போது தான் தொன்மையான பொருட்களை அழிவதை தடுக்க முடியும். திருநெல்வேலி மாவட் டத்தில் ஸ்ரீவைகுண்டம், குரும்பூர், பாளையங்கோட் டை உள்ளிட்ட 37 ஊர்களில் ஒவ்வொரு நாளும் முதுமக்கள் தாழிகள், பானைகள், கொள்கலன்கள் அழிக்கப் பட்டு வருகிறது. பானை தயாரிப்பில் தமிழகம் தான் முன்னோடி என்பதை கர்நாடகா, மகராஷ்டிரா மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதிச்சநல்லூரில் முழுமையான அகழ்வாராய்ச்சியை தமிழக அரசு நடத்தி அங்கு மறைந்து கிடக்கும் தமிழகத்தின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும் தற்போதைய ஈராக் நாட்டின் மெசபடோமியா நாகரிகத்துக்கும் பல ஒற்றுமை உள்ளது. திருமணத்தின் போது பெண்கள் தங்களது தலையில் தங்கத் தகடு கட்டும் பழக்கம் உள்ளது. அதேபோல் மெசபடோமியா பெண்களும் தங்களது திருமணத்தின் போது தலையில் தங்கத் தகடு அணிகின்றனர். உலகத்திலேயே நான்கு ஆயிரம் தொல்பொருட்கள் கிடைத்த ஒரே இடம் ஆதிச்சநல்லூர் என்றால் மிகையல்ல.இவ்வாறு டி.கே.வி. ராஜன் கூறினார்.

0 மறுமொழிகள்: