வீட்டை உடனே காலி செய்த மாஜி அமைச்சர்

அமைச்சர் நாராயணசாமிக்கு கிடைத்துள்ள மத்திய திட்டத்துறையை, இதற்கு முன், ராஜசேகரன் என்பவர் கவனித்து வந்தார். இவரது ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிந்து விட்டது. மீண்டும் எம்.பி.,பதவி வழங்கப்படவில்லை. மறைந்த காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவின் மருமகனான இவர், தனக்கு எம்.பி., பதவி வழங்கப்படவில்லை என்றதும் மறுநாளே டில்லியில் உள்ள வீட்டை காலி செய்து பொருட்களை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இந்நிலையில், தனது வீட்டுச் சாவியை இன்று அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்க இருக்கிறார். பதவி இழந்த உடனேயே அமைச்சர் ஒருவர் வீடு காலி செய்வது அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்.காம்

2 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொல்வது:

இப்படியும் சிலர் இருப்பது தான் நம்பிக்கையை வளர்க்கிறது.

திவா சொல்வது:

ஆமாம் குமார், இன்னும் கலி முத்தலை போலிருக்கு!