பறவை நேயம்!

லண்டன்: மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ற பழமொழி, பறவைகளுக்கு பொருந்தாது. தாய்ப் பறவை கற்றுக்கொடுத்தால் மட்டுமே, குஞ்சுகள் பறக்கப் பழகும். தாயை இழந்துவிட்டால்... அதற்கு யாராவது கற்றுக்கொடுக்காவிட்டால், பறக்கத் தெரியாது. இப்படிப்பட்ட நாரைக்கு பறக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார், கேரி ஜாமித் என்ற பறவை ஆர்வலர். பயங்கர சூறாவளியால், நாரை குடும்பம் ஒன்று கூண்டோடு பலியாகிவிட்டது. அதில், ஒரு குஞ்சு மட்டும் பிழைத்துக் கொண்டது. அதை அன்போடு எடுத்து வந்தார், பறவை ஆர்வலர் கேரி ஜாமித். நாரைக்குஞ்சுக்கு தாய் இல்லாததால், அதற்கு பறப்பது எப்படி என்று தெரியாது.


அந்த நாரைக்குஞ்சுக்கு டியூட் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் ஜாமித். டியூட்டுக்கு பறக்கக் கற்றுக்கொடுக்க தினமும் குறிப்பிட்ட நேரம் செலவிட்டார். மெல்ல ஓடி, பிறகு வேகம் பிடித்து, கையை இறகு போல படபடத்து கற்றுக்கொடுத்தார் ஜாமித். இதைப் பார்த்த டியூட்டும், மெல்ல நடந்து, பின் ஓடி, இறகுகளை அடித்து பறக்க முயன்றது. சில நாட்களில், இந்த பயிற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஜாமித்துயுடன் ஓடிய நாரை, மூன்றடி உயரத்துக்கு பறந்தது. பழகப்பழக, பறக்கும் திறன் வந்துவிட்டது. இப்போது 70 அடி உயரத்துக்கு பறக்கிறது டியூட். விரைவில் இதை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட உள்ளார் ஜாமித்.

கோமா பாட்டி மீண்ட செய்தி

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
--------------


லண்டன்: ஏதோ ஒரு காரணத்தால், தலையில் அடிபடும் போது, சுயநினைவை இழக்கும் பரிதாபம் பலருக்கும் ஏற்படத்தான் செய்கிறது। கோமா நிலைக்கு சென்றுவிடும் காலகட்டத்தில், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியவர்கள் அரிதாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பிரிட்டனில், சாலை விபத்தில் சிக்கி, கோமா நிலைக்குச் சென்ற பெண்ணை, மீண்டும் சுய நினைவிற்கு கொண்டு வந்துள்ளார் அவரது பேத்தி.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; வடக்கு லண்டன், நீஸ்டன் பகுதியை சேர்ந்தவர் தேவ்பாய் பட்டேல் (56). இந்தியாவைச் சேர்ந்த இவர், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே தேவ்பாய் பட்டேல் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி, இவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் இறந்தார். படுகாயமடைந்த தேவ்பாய் பட்டேல், மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவ்பாய் பட்டேல் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினர். மேலும், தங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர். இருப்பினும், சுய நினைவுக்கு பட்டேல் திரும்பவில்லை.


இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பட்டேலை பார்ப்பதற்காக அவரது பேத்தி லீலாவை, தாத்தா குன்வெர்ஜி அழைத்து சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் பாட்டியை பார்த்த லீலா, தன்னையும் மறந்து ஓ... வென்று கதறினார். அப்போதுதான், அந்த அதிசயம் நடந்தது, டாக்டர்கள் பேச்சு கொடுத்தும், எழுப்ப முயன்றும் எதுவுமே பயன் தராத நிலையில், தனது பேத்தியின் கதறல், பாட்டியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது. கண் விழித்துப் பார்த்த பட்டேல், தனது பேத்தியை கொஞ்சி மகிழ்ந்தார். இந்த அதிசய காட்சியைப் பார்த்த டாக்டர்களால், தங்களது கண்களையே நம்ப முடியவில்லை. இது மருத்துவ உலகில் நடந்த அதிசயம் என்று வியந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டேல், இப்போது நலமாக இருக்கிறார்

தூய்மையான கிராமம்

இது போதாது, இன்னும் எவ்வளவோ தூரம் போகனும் இல்லையா?
-----------

ஷில்லாங்: பொது இடங்களிலேயே குப்பையை கொட்டுவது, சாக்கடைகளை தூய்மை படுத்தாமல் அப்படியே விட்டு விடுவது, போன்ற செயல்கள் அதிகம் அரங்கேறிவரும் காலத்தில், சுற்றுப்புற தூய்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது மேகாலயா மாநிலத்தில் உள்ள மாவ்லினாங் கிராமம். மேகாலயா மாநிலத்தில் உள்ள மாவ்லினாங் கிராமம், தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 75 கி.மீ., தூரத்தில், ஜெயின்தியா மலை மாவட்டத்தில் உள்ளது. சுத்தம் என்பதற்கு இலக்கணமாக திகழும், இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் மூங்கிலால் செய்யப் பட்ட குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதில் சேகரிக்கப்படும் குப்பைகள், அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பள்ளத்தில் கொட்டப்படுகின்றன. இதில் தரம் பிரிக்கப்படும் மக்கும் குப்பையைக் கொண்டு உரம் தயாரித்து, விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். இந்த கிராமத்தில், பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, அந்தக் கிராமத்தின் தலைவர் தாம்லின் கோங்கோத்ரெம் கூறியதாவது :பரம்பரை பரம்பரையாகவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்ததன் விளைவாகத்தான் இந்தக் கிராமம், தூய்மைக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது. சுமார், 450க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், யாருக்கும் குடிப்பழக்கம் என்பது கிடையாது. இதனால், இயல்பாகவே ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இது மட்டுமின்றி, கால்நடைகள், தாவரங்கள் ஆகியவற்றையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இங்குள்ளவர்களிடையே இயல்பாக ஏற்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கும், இப்போதுள்ள சுற்றுப்புற சூழல் கிடைக்க வேண்டும் என்பதில் கிராம மக்கள் மிகவும் உறுதியுடன் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், மே மற்றும் ஜூன் மாதங்களில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இத்தனை சிறப்புகளை கொண்டுள்ள இந்த கிராமம், ஆசியாவின் தூய்மையான கிராமமாக கடந்த 2003ம் ஆண்டு தேர்ந் தெடுக்கப்பட்டது. சுற்றுப்புற தூய்மைக்கு உதாரணமாக திகழும் இந்தக் கிராமத்தில், பொது இடங்களில், குப்பையை கொட்டும் நபர்கள் தண்டிக்கப்படுவதில்லை . தண்டிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை; வெளியூர்க் காரர்கள் குப்பைகளை தெரியாமல் பொது இடத்தில் வீசும் பட்சத்தில், யார் அதனை முதலில் பார்க்கிறார்களோ, அவர்களே அதை எடுத்து குப்பைத் தொட்டியில் வீசிவிடுவர். இங்குள்ள நீரோடைகளில் ஓடும் தண்ணீர் கண்ணாடியைப் போல் பளபளப்பாக மின்னுவதால், எந்தவித தயக்கமுமின்றி தண்ணீரை அப்படியே குடிக்கலாம். இந்த கிராமம், சுற்றுலாத் தலமாக உருவாகிவருகிறது. அதிகம் பேர் வந்து தங்கி மகிழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பிராணி நேயம்

அதென்னங்க எப்ப பாத்தாலும் மனித நேயம்? இங்க பிராணி நேயம் பாருங்க!
--------------

கர்நூல்: அரசாங்க ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் வழக்கம் பல ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது। இதேபோன்று மனிதர்களுக்காக உழைக்கும் வாயில்லா பிராணிகளான எருதுகளுக்கும் வாரத்தில் ஒருநாள் திங்கட் கிழமை விடுமுறை அளித்து இங்குள்ள விவசாயிகள் பிராணிகள் நேயத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.


ஆந்திராவில் கர்நூல் மாவட்டம் ஆலஹர்வி அருகே விருபாபுரம் அடுத்த பலுகோட கிராம விவசாயிகள் வாரத்தில் ஒருநாள் இப்படி ஓய்வு அளிக்கின்றனர். இந்த கிராமத்தில் பசவேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவராக எழுந்தருளியுள்ள பசவேஸ்வர சுவாமியின் (நந்தி எருது) வாகனமான எருதுகளை கிராமத்தின் எல்லையில் உள்ள ஏரிக்கு ஓட்டிச் சென்று ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமையன்று தண்ணீரில் குளிப்பாட்டி சுத்தம் செய்கின்றனர். பின்னர், ஏரியிலிருந்து எருதுகளை குழந்தை குட்டிகளுடன் இங்குள்ள பசவேஸ்வர சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்து பூஜை செய்கின்றனர். இந்த கிராமத்து விவசாயிகள் அனைவரும் இந்த முறையை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். நிலத்தில் விதை விதைக்க வேண்டுமென்றால் கூட திங்கட் கிழமை ஏர் கட்ட மாட்டார்கள். மேலும், இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மது அருந்தி விட்டால் கோவில் அருகில் செல்ல மாட்டார்கள். திங்கட் கிழமை அன்று கிராம மக்கள் யாரும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். இதுபோன்ற கிராம கட்டுப்பாட்டினால் தங்கள் விளை நிலத்தில் நல்ல விளைச்சல் காண்பதாக, இந்த கிராம மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தலை வழுக்கை -க்ளோனிங்

இது உடனேயே சகாய செலவில் வராதுதான்! இருந்தாலும் ஒரு வழி வந்திகிட்டு இருக்கு। கொஞ்சம் நம்பிக்கையோட இருக்கலாம்!
--------
லண்டன்: தலை வழுக்கையாகி விட்டதே என்று இனி கவ லைப்பட வேண்டாம்; இதுக் கும் குளோனிங் சிகிச்சை முறை வந்து விட்டது।தலை முடி உதிர்வதற்கும், வழுக்கையாவதற்கும் பல காரணங்கள் உண்டு। சில நோய்கள் காரணமாக கூட முடிகள் உதிரும்.மரபு வழியாகவும் வழுக்கை ஏற்படும்; ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையினரில் சிலருக்கு வழுக்கை ஏற்பட் டால், மூன் றாவது தலைமுறையில் உள்ள சிலருக்கு வழுக்கை வரலாம். இப்படி பல காரணங் களால் ஏற்படும் வழுக்கை தீரவும் இப்போது நவீன சிகிச்சை முறை வந்துவிட்டது.

இன்டர்சைடெக்ஸ் முறை: உடலில் ஏற்படும் கோ ளாறுகளுக்கு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை உள்ளது போல, தலைமுடிகளை மீண் டும் உருவாக்கவும், நகல் எடுக் கும் முறை வந்துவிட்டது. ஒன்றை போலவே இன் னொன்றை உருவாக்கும் மருத்துவ முறை தான் குளோனிங் என்பது. முதன் முதலில் ஆட்டின் செல்லில் இருந்து, அதைப் போலவே இன்னொரு ஆட்டை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்தனர். இந்த குளோனிங் முறை இப்போது தலைமுடிகளை உருவாக்குவதற்கும் வந்துவிட்டது.


பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த இன்டர்சைடெக்ஸ் என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்த முறையை வர்த்தக ரீதியாக செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. விஞ்ஞானிகள் ஆராயச்சிக்கு பின் வர்த்தக ரீதியாக பயன்படுத்த உள்ள இந்த முறைக்கு, "பாலிகியூலர் செல் இம்ப்ளேன்டேஷன்' என்று பெயர். தலையில் அடித்தோலில் முடி வேர்களை இழப்பதால் தான் வழுக்கை ஏற்படுகிறது.


இதனால், மீண்டும் முடிகளை வளர்க்க குளோனிங் முறையில் நடவடிக்கை மேற் கொள்ள முடியும். தீயினால் முடிகள் இழப்பு, நோயினால் முடி கொட்டுவது போன்ற காரணங்களால் வழுக்கை ஏற்படுவோருக்கும் இந்த நவீன சிகிச்சை முறை கைகொடுக்கும்.தலையில் உள்ள செல்களில் செய்யப்படும் இந்த புது முறை சிகிச்சையில், மயிர்க் கால்களில் இருந்து புதிய முடிகள் உருவாக்கப்படுகிறது. வழுக்கை ஏற்பட்ட ஐந் தாண்டுக்குள் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் முடிகளை மீண்டும் வளர்த்துக் கொள்ள முடியும்.