நல்ல சேதி 07-02-2008

தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவரின் கதை
எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் வடிவமைத்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனை சூடு பறக்கிறது.

அவதேஷ் மிஸ்ரா...எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இந்த நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து வேறு வேலைக்கு முயற்சி செய்தார். புதுவகையில் ஒரு ஸ்கூட்டர் தயாரிக்கும் எண்னம் அவருக்கு தோன்றியது. வேலை தேடலை விட்டு வெளிநாடுகளில் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களை நேரடியாக பார்க்க முடிவு செய்தார். சீனா, ஜெர்மனி நடுகளுக்கு சென்றார்.

ஜெர்மனியில் ஜி.பி.செஸ்கெர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சீனாவின் ஷாங்காயில் ஸ்கூட்டர்கள் தயாரிக்கிறது. அந்த நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கூட்டு முயற்சியில் இந்தியாவில் அவற்றை தயாரிக்க உடன்படிக்கை ஏற்பட்டது. 50 லட்சம் முதலீட்டில் ஜிஈ ஆட்டோ துவக்கப்பட்டது. டேராடூனில் சலகுயி தொழிற்பேட்டையில் தொழிற்சாலை உருவானது. ஜி பைக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது.

இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை ஒட்டி பீஹார் பாட்னாவில் 1.5 கோடியில் இன்னொரு தொழிற்சாலை உருவானது. இரண்டிலும் சேர்த்து மாதம் 7,500 ஸ்கூட்டர்கள் தயாராகின்றன. இதே போல் மோட்டார் பைக்குகள் தயார் ஆகின்றன. ரகத்தை பொருத்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 முதல் 100 கி.மீ ஒடுகின்றன. சார்ஜ் தீர்ந்தாலும் பெட்ரோலில் பத்து கிமீ செல்ல பாதுகாப்பு வசதியும் உண்டு.

சுற்று சூழலுக்கு ஏற்ற இவை முதல் கட்டமாக உ.பி, ம.பி, பீகார், அஸாம், ஜார்கண்ட் மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. மற்ற மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டங்கள் உள்ளன.தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவரின் கதை
எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் வடிவமைத்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனை சூடு பறக்கிறது.

அவதேஷ் மிஸ்ரா...எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இந்த நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து வேறு வேலைக்கு முயற்சி செய்தார். புதுவகையில் ஒரு ஸ்கூட்டர் தயாரிக்கும் எண்னம் அவருக்கு தோன்றியது. வேலை தேடலை விட்டு வெளிநாடுகளில் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களை நேரடியாக பார்க்க முடிவு செய்தார். சீனா, ஜெர்மனி நடுகளுக்கு சென்றார்.

ஜெர்மனியில் ஜி.பி.செஸ்கெர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சீனாவின் ஷாங்காயில் ஸ்கூட்டர்கள் தயாரிக்கிறது. அந்த நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கூட்டு முயற்சியில் இந்தியாவில் அவற்றை தயாரிக்க உடன்படிக்கை ஏற்பட்டது. 50 லட்சம் முதலீட்டில் ஜிஈ ஆட்டோ துவக்கப்பட்டது. டேராடூனில் சலகுயி தொழிற்பேட்டையில் தொழிற்சாலை உருவானது. ஜி பைக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது.

இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை ஒட்டி பீஹார் பாட்னாவில் 1.5 கோடியில் இன்னொரு தொழிற்சாலை உருவானது. இரண்டிலும் சேர்த்து மாதம் 7,500 ஸ்கூட்டர்கள் தயாராகின்றன. இதே போல் மோட்டார் பைக்குகள் தயார் ஆகின்றன. ரகத்தை பொருத்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 முதல் 100 கி.மீ ஒடுகின்றன. சார்ஜ் தீர்ந்தாலும் பெட்ரோலில் பத்து கிமீ செல்ல பாதுகாப்பு வசதியும் உண்டு.

சுற்று சூழலுக்கு ஏற்ற இவை முதல் கட்டமாக உ.பி, ம.பி, பீகார், அஸாம், ஜார்கண்ட் மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. மற்ற மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டங்கள் உள்ளன.

தினமலர் புதுவை பக்கம் 4

நல்ல சேதி -5 பிப் 6 ,2008

அரவிந்த் கண் மருத்துவ மனையில் செயற்கை விழி ஆபரேஷன்.
உலக அலவில் இந்த சிகிச்சை 200 பேருக்குத்தான் செய்யப்பட்டு உள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் என்பதால் இந்தியர் பலர் தேவை இருந்தும் செய்து கொள்ள முடியவில்லை. அமேரிக்க மருத்துவர் ஆன்டணி ஆல்டேவ் செயற்கைகருவிழி பொருத்த சிறப்பு பயிற்சி அளித்தார். பயிற்சி பெற்றோர் ஒரு மணி நேரத்தில் இதை செய்ய இயலும். இப்போது இதன் செலவு 22 ஆயிரம்தான்.

தினமலர் புதுவை 06-02-2008 பக்கம் 16

நல்ல சேதி -4 06-02-2008

காப்பி அடிக்கும் மாணவர்களை திருத்த தண்டிப்பதைவிட அவர்களுடைய அம்மாவை அழைத்து அவர்கள் மூலமாக திருத்தும் பணியை மத்திய பிரதேச பல்கலை நூதன திட்டம் வகுத்து உள்ளது.
வட மாநிலங்களில் காப்பி அடிப்பது தொழிலாகவே நடை பெறுகிறது. இதில் பிடிபட்ட மாணவர்களின் அம்மாக்களை பல்கலை ஒரு கூட்டத்துக்கு அழைத்து உள்ளது. அம்மாக்கள் தம் பிள்ளைகள் காப்பி அடிக்க மாட்டார்கள் என உறுதி மொழி தருவர். இதையும் மீறி காப்பி அடித்து பிடிபட்டால் அந்த மாணவர்கள் தண்டிக்கப்படுவர்.
துணை வேந்தர் போபால் சிங்க் தான் உஜ்ஜயினியில் கலெக்டராக இருந்த போது இதை நடை முறை படுத்தியதாகவும் அது நல்ல பலனை அளித்ததாகவும் கூறினார்.

தினமலர் புதுவை 06-02-2008 பக்கம் 5

நல்ல சேதி -3 06-02-2008

ரயில் பயணிகளிடம் கண்டபடி கட்டணம் வசூலிப்பதா?

ரயில்வேக்கு பிரதமர் அலுவலகம் கண்டிப்பு.

2001 ஆண்டு ரயில் பாதுகாப்பு தொடர்பாக கமிட்டி ஒன்று பரிந்துரைத்ததை அடுத்து அவற்றை நிறைவேற்ற 17,000 கோடி ரூபாய் தேவை என முடிவானது. பட்ஜெட் மூலமாக 12,000 கோடியும் மீதியை பயணிகளிடம் பாதுகாப்பு கட்டணம் என்றும் வசூலிக்க முடிவானது.
இதன்படி கடந்த மார்ச் 31 வரை அக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னும் அக்கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படுவதை பார்லிமென்ட் ஆய்வுக்கமிட்டி சமீபத்தில் கண்டுபிடித்தது. அனுமதிக்கப்பட்ட காலத்தை தாண்டி வளர்ச்சி கட்டணம் என்று அதை வசூலிப்பதை தவறு என அக்குழு கண்டித்து உள்ளது. இந்த அறிக்கையை பார்த்து பிரதமர் அலுவலகமும் ரயில்வேயை கண்டித்து உள்ளது. இதை அடுத்து இந்த மார்ச் 31 உடன் (1000 கோடி வசூலித்த பின்னர்) இத்திட்டம் கைவிடப்படும்.....

தினமலர் புதுவை 06-02-2008 பக்கம் 1

நல்ல சேதி -2 06-02-2008

வெயிட் இல்லாத காஸ் சிலிண்டர் வருகிறது!

இப்போதுள்ள உருக்கு சிலிண்டர் போல பாதி எடை உள்ளது. உள்ளே இருக்கும் காஸ் ஐ யும் பார்க்க முடியும். நார்வே நாட்டை சேர்ந்த ரகஸ்கோ என்ற நிறுவனம் இதை தயாரிக்கிறது. இவை பரிசோதனையாக பயன்படுத்திப்பார்க்கப்பட்டன. எல்லாவகையிலும் நன்றாக இருப்பதாக தெரிந்ததை அடுத்து அந்த நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக இதை தயாரிக்க முன் வந்துள்ளது. பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.....

தினமலர் புதுவை 06-02-2008

நல்ல சேதி பிப் 6, 2008

மும்பை: டில்லியை அடுத்து, சென்னையில் இ - செக்' முறை அமலுக்கு வருகிறது. காசோலை, கிளியர்' ஆவதற்கு மூன்று நாள் ஆகும் நிலை போய், மின்னணு முறையில், மூன்று மணி நேரத்தில், கிளியர்' ஆகி விடும்.


அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த, எலக்ட்ரானிக் செக்' முறை தான் அமலில் உள்ளது. அதனால், எவ்வளவு தூரமாக இருந்தாலும், ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, இன்னொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்ற சில மணி நேரமே பிடிக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு மிக சுலபமாக, தங்களின் செக்'குகளை மாற்ற முடிகிறது.

வங்கிகளில், செக் பரிமாற்றத்துக்கு இப்போது கடைபிடிக்கும் முறைக்கு, மேக்னடிக் இங்க் கேரக்டர் ரெகக்னேஷன்' (எம்.ஐ.சி. ஆர்.,) என்று பெயர். இதில் காகித வடிவில் காசோலையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த காசோலையை பரிசீலித்து, அந்த காசோலை உண்மையானது தான் என்பதை வங்கி உறுதி செய்து கொண்டு, செக் போக வேண்டிய குறிப்பிட்ட வாடிக்கையாளர் கணக்கு உள்ள வங்கிக்கு அனுப்பும். அந்த வங்கி அந்த காசோலையை வாங்கி, வாடிக்கையாளர் கணக்கில் சேர்க்கும். இதற்கு மூன்று நாட்கள் பிடிக்கும். உள்ளூர் காசோலையாக இருந்தால், 24 மணி நேரம் பிடிக்கும்.

மின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கையாளப்படும் , இ- செக்' பரிமாற்றம், செக் ட்ரன்கேஷன் சிஸ்டம்' (சி.டி.எஸ்.,) முறை மூலம் கையாளப்படுகிறது. இப்போதுள்ள நடைமுறை போல, காசோலையை காகித வடிவில், வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக்கு சென்று, இ -செக்' கை போட்டால், போதும், வாடிக்கையாளர், தான் யாருக்கு அனுப்ப விரும்புகிறாரோ அவர் கணக்குக்கு பணத்தை வங்கி அனுப்பி விடும். இதற்கு மூன்று மணி நேரம் தான் ஆகும்.

டில்லியில், ஒரு மாத சோதனைக்கு பின், அமல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஐசிஐசிஐ.,வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி, பேங்க் ஆப் அமெரிக்கா, கரூர் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் 72 கிளைகளில், இ - செக்' முறை அமலுக்கு வந்துள்ளது.விரைவில், மும்பை மற்றும் சென்னையில், இந்த புதிய முறையை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் இந்த இ - செக்' முறை அமல்படுத்தப்பட்டால், அதிகம் பேருக்கு பலன் கிடைக்கும். காசோலை கிளியர்' ஆவதற்கு தாமதம் ஆவதும் குறையும்; வாடிக்கையாளர்களுக்கும் நேர, பணம் இழப்பு ஏற்படாது' என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

தின மலர் ஈபேப்பர் 06-02-2008

நல்ல சேதி3, 05-05-2008

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள செட்டி நாடு பங்களாக்களை புதுப்பிக்க அவற்றை யுனஸ்கோ நிறுவனம் தத்தெடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், செட்டி நாடு, கானாடு காத்தான், காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அந்தக் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 90 க்கும் மேற்பட்ட மாபெரும் மாளிகைகள் உள்ளன.

செட்டி நாட்டு கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இவை உள்ளன. கடல் போல பரந்து விரிந்து கிடக்கும் இந்த மாளிகைகள் இன்று கவனிப்பாரின்றி, பராமரிப்பின்றி பொலிவிழந்து கிடக்கின்றன. பல வீடுகள், சேதம் அடைந்துள்ளன, சேதமடைந்து வருகின்றன.

இந்த பங்களாக்கள் குறித்த ஆய்வில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இவற்றின் தொன்மையை அறிந்த யுனஸ்கோ நிறுவனம் அந்த பங்களாக்களை பழைய அழகு குறையாமல் புதுப்பிக்க தத்தெடுத்துள்ளது.

இது குறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில், 2007 ம் ஆண்டு கானாடுகாத்தான் உள்பட சுமார் 100 பாரம்பரியம் மிக்க நகரங்களை யுனஸ்கோ தேர்வு செய்துள்ளது.

இந்த பங்களாக்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை யுனஸ்கோ அமைப்பினரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/02/tn-unesco-to-protect-chettinad-buildings.html

நல்ல சேதி2, 05-02-2008

கோவில் இடிப்பு: மன்னிப்பு கேட்கும் மலேசியா!
கோலாலம்பூர்: மலேசியாவின் கிளாங் நகரில் உள்ள இந்துக் கோவிலை இடித்தது தவறு. அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் கூறியுள்ளார்.

மலேசியாவில், ஆளுங்கூட்டணி மீது தமிழர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த அதிருப்தியின் விளைவு, வருகிற பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்ற பயத்தில் ஆளுங்கூட்டணி உள்ளது. இதனால் தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதில் ஒரு பகுதியாக கிளாங்கில் உள்ள பழம்பெரும் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு மலேசிய துணைப் பிரதமர் ரஸ்ஸாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாங்கில் உள்ள கோவில் இடிக்கப்பட்டது, அதிலும் தீபாவளிக்கு முன்பு இடிக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்துள்ளோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்றார் அவர்.

மலேசியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் சுமார் 24 ஆயிரம் இந்து கோயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.aol.in/tamil/news/2008/02/04/world-malaysia-expresses-regret-for-demolishing.html

நல்ல சேதி-1 05-02-2008

இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள் அதிக அளவில் இருந்தாலும் அவற்றின் பேடன்ட் உரிமை பதிவு செய்யவோ அல்லது அதை வெற்றிகரமாக சந்தைப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டுள்லது.
அசாம் மாநில முகமது உசேன் பழைய டயர் மற்றும் மூங்கிலைக்கொண்டு குறைந்த செலவில் காற்றாலையை வடிவமைத்து உள்ளார். கஷ்மீர் முஸ்டாக் அகமது தார் மரங்களில் வேகமாக ஏற கருவி கண்டு பிடித்தார். கையில் எடுத்துச்செல்லக்கூடிய இந்த கருவியை பயன்படுத்தி 50 அடி உயரத்தை 5 நிமிஷத்தில் ஏறிவிடலாம். ஆனால் இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. தமிழக முருகானந்தம் மினி சானிட்டரி நாப்கின் தயாரிக்க கருவி கண்டுபிடித்தார். இதன் மூலம் தயாரிக்கும் நாப்கின் விலை ஒரு ரூபாய் மட்டுமே.
இப்படி ஏராளமான திறமை இருந்தும் பயனாகாத நிலையை தடுக்க தடைகள் பேடன்ட் பதிவு செய்ய தெரியாததும் முடியாததும் நிதி ஆதாரம் திரட்ட முடியாததும்தான்.
இந்தியாவில் 2002 இல் 9000 விண்ணப்பங்கள் பேடன்ட் பதிவுக்கு வந்தன. அதே சமயம் சீனாவில் 80,000. அமேரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிகம்.

ஐ.ஐ.எம்.ஏ பேராசிரியர் அனில் குப்தா கூறியதாவது:
அந்த குறையை போக ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. கண்டு பிடிப்புகள் முறைப்படி பதிவு செய்யப்படும். நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியும் தரப்படும். இத்தகைய மையங்கள் 200 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ளது.
தொடுப்பு: http://www.nif.org.in/

தினமலர் 05-02-2008 புதுவை பதிப்பு பக்கம் 4

நல்ல சேதி-2 , 03-02-2008

சென்னையில் சென்ற சனிக்கிழமை "லிவ் எனேபில் 08” என்ற சிறப்பு வேலை வாய்ப்பு நிகழ்ச்சி எம்சிசி பள்ளியில் நடந்தது. கண் பார்வையிலும் உடல் ரீதியாகவும் திறன் குறைந்த 350 பேர் வந்திருந்தார்கள். 120 பேர் பேட்டிகளில் இறுதிச்சுற்றை அடைந்தனர். பல வங்கிகளும் கால் சேவை மையங்களும் வேலை வாய்ப்பை வழங்கின.

டெக்கான் கிரானிகிள் 03-02-2008 பக்கம் 5

நல்ல சேதி 03-02-2008

லியோ பியால்கோ; வயது 92. மாகுலர் டீஜெனரேஷன் ஆல் பார்வை குறைவு ஏற்பட்டு வலது கண்ணில் ஓரப்பார்வை மட்டும் உள்ளது. இடது கண் பார்வை இல்லை. 60 வருடங்களாக கால்ப் ஆடுகிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் 70 வயதுக்கு மேற்பட்ட சகாக்களுடன் கால்ப் ஆடப்போய் விடுவார். அமேரிக்காவில் ப்ளாரிடா, க்ளியர்வாட்டர், கோவ் கே கன்ட்ரி கிளப்பில் ஜனவரி 4 ஆம் தேதி ஆடும்போது ஒரே அடியில் பந்தை 110 கஜம் தூரத்தில் உள்ள குழியில் வீழ்த்தினார்! (இது தேர்ந்த கால்ப் வீரர்கள் கூட அரிதாகவே செய்வது!) சக வீரர் கெரிங்க் அதைப்பற்றி கூறும்போது " அவர் அதற்கு அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர் மனைவியிடம் சொல்லக்கூட நாங்கள் தூண்டி விட வேண்டி இருந்தது" என்றார். கிளாப்பில் நன்பர்கள் அவருக்கு பரிசு அளித்து கௌரவித்தனர்.
டெக்கான் கிரானிகிள் 03-02-2008 பக்கம் 12