மற்றவர் பங்களிப்பு

25-8-2006 இல் பஞ்சாபில் பல பிஹாரி தொழிலாளிகள் கட்டாய அடையாள அட்டை மற்றும் உழைக்க பெர்மிட் ஆகியவற்றை எதிர்த்து போராட, லூதியானாவில் போலீஸுடன் கைகலப்பு ஏற்பட்டு பலர் காயமுற்றனர். நிதிஷ் உடனடியாக பஞ்சாபில் அப்போது முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் உடனும் உள்துறை இலாகா மந்திரி சிவராஜ் பாடிலுடனும் பேசினார். பிஹார் எம் எல் ஏக்கள் 3 பேர் அடங்கிய குழு உடனடியாக லூதியானாவுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் உள்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார்கள். வேலை பெர்மிட் உத்தரவு இரத்து செய்யப்பட்டது. பிரச்சினை எவ்வளவு விரைவாக தீர்க்கப்பட்டது எனில் நாட்டில் இது முதல் பக்க பத்திரிகை செய்தியாகக்கூட ஆகவில்லை. எப்படி உடனடி தெளிவான முடிவுகளை தலைமை எடுப்பதால் மோசமான விளைவுகள் தடுக்கப்படலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.பஞ்சாமிர்தம் என்ற குழு மடலில் இருந்து.

நல்ல தொடுப்பு

இந்தக் கால இளைஞர் சமூகத்திற்கு எதையாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் தூக்கமே வராது போலிருக்கிறது. சதா அனுதினமும் எதாவதொரு தேடலுடன்தான் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பணம் பண்ணுவது என்று மட்டும் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்வதில்லை. கைக்காசைச் செலவழித்தாவது தங்களுடைய தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வயது 35 நெருங்கினாலும் பாலாஜி இன்னும் இளைஞராகவே வலம் வருகிறார். இவருடைய சாதனைகளும் யாரும் தொட்டிராத தளத்தில் இளமையாகவே வலம் வருகின்றன.

யார் இந்த பாலாஜி? 'ஜி' என்று அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் ஓவியர் மற்றும் ஓவியத் துறை சார்ந்த பல்துறை வித்தகர். திண்டுக்கல்லைப் பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி என்னும் 'ஜி' தற்போது TVS நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

நாம் அன்றாடம் பயன்படுத்திவிட்டு உபயோகமில்லை எனக் கருதித் தூக்கி எறியும் கோழியிறகு, களிமண், துணி, பஞ்சு, சாக்பீஸ் துண்டுகள், குட்டைப் பென்சில்கள், மரக்கிளைகள் போன்ற கழிவுப் பொருட்களிலிருந்து கலைப் பொருட்களை உருவாக்குகிறார்...........

மேலும் படிக்க http://www.aaraamthinai.com/samugam/oorvalam/Jan08/01oorvalam405.asp

நல்ல சேதி-2- 22-1-2008

சிறகு பவுண்டேஷன் இன் 'இணைந்து நாம் 99' விழா. இந்தியாவை மாற்ற கலாம் காட்டினார் புதிய வழி:
இளைஞர்கள் தொழில் முனைவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறகு பவுண்டேஷன் இன் 'இணைந்து நாம் 99' திட்டத்தை துவக்கி வைத்து பேசினார் கலாம்.
"பொறுப்பான, வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றார் கலாம்.....என் வாழ்க்கையை குறும்படமாக எடுத்துள்ளனர். மற்றவர் என்னை உதாரணமாக கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனாலும் ஒரு சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும்; ஆன்மீகம் உணர்ந்த நிறைந்த வாழ்க்கையில் தான் முழு திருப்தி காண இயலும் என்ற சம நிலைக்கு வரக்கூடும் என நான் நம்புகிறேன்....மன எழுச்சி அடைந்த 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறையினர் எழுச்சி பெற வேன்டும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்.

சிறகு பவுண்டேஷன் இன் திட்டத்தின் கீழ் 99 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி தரப்படும். சர்வ தேச தரத்தில் இந்தியாவிலிருந்தும் மற்றும் உலகளாவிய நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு இது நிறைவேற்றப்படும்..... தேவையான செய்முறை பயிற்சி அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மூலம் அளிக்க வேண்டும்...”

மேலும் தகவல்களுக்கு தினமலர் 22-1-2008 புதுவை பக்கம் 5

நல்ல சேதி-1- 22-1-2008

கழுத்தில் தாலி; கையில் பாட புத்தகம்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்ற கல்வி திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப் படுத்தியது. ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களில் கல்வி அறிவு இல்லாத பெண் குழந்தைகள் குறித்து வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் நிலைக்கு ஏற்ப 6, 7 அல்லது 8 ஆம் வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். மொத்தம் 5,600 பேர். அவர்களில் 64 பேர் திருமணம் ஆனவர்கள் என தெரிய வந்தது. இவர்களுக்கு கல்வி அறிவு தருவதைப்பற்றி மட்டும் கவனம் செலுத்தப்படும்; அவர்கள் மண விஷயத்தை ஆலோசிக்கப்போவதில்லை; அது அவர்கள் படிப்பை பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர் 22-1-2008 புதுவை பக்கம்2