நல்ல சேதி 10-1-2008

டில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஐ.நா கவுரவம் தினமலர் பக்கம் 4 10-1-2008

இது ஐ நா வின் பசுமை பாதுகாப்பு பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காமல் பசுமை பாதுகாப்புக்கு பெரிதும் உதவும் திட்டங்கள் பட்டியலை ஐ நா தயாரித்துள்ளது. அதில் டில்லி மெட்ரோ ரயில் திட்டம் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. மெட்ரோ ரயிலின் தொழில்நுட்பங்கள் சிறப்பாக உள்ளதால் கரியமில வாயு கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முறை பிரேக் போடும்போதும் கரியமில வாயு அதிகமாக வெளியாவாதை தடுக்க டில்லி மெட்ரோ ரயில்களில் ரீஜெனரேட்டிங் டெக்னாலஜி பயன்படுகிறது. இத்தைகைய திட்டங்களுக்கு ஐநா ஊக்கம் தருகிறது. இந்த வகையில் மெட்ரோ ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வெகுமதியை பெருகிறது.
---------------------
ப்ரேக் போடும்போது கரியமில வாயு அதிகம் வெளிப்படுகிறதா? அப்படித்தான் செய்தி. ஆனால் ப்ரேக் போடும்போது மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்றே நினைக்கிறேன்.

நல்ல சேதி 9-1-2008

தினமலர் பக்கம் 8, தேதி 9-1-2008 சொல்கிறார்கள்

சென்னை பல்கலையில் புவி அமைப்பியல் முதுகலை படித்து ஸ்காட்லாந்து நாட்டில் வேலை கிடைத்திருக்கும்
ஜீவன்:
நகைக்கடையில் வேலை பார்க்கும் அப்பா. தனியார் கம்பனியில் அண்ணன் என சாதாரண குடும்பம். கிராம நகராட்சி பள்ளிகளில் படித்தார். சுனாமி தாக்குதலுக்குப்பின் இந்திய கடலோரங்களில் ஏற்பட்ட மாறுதல்களை ஆராய்ச்சி செய்த குழுவில் வேலை பார்த்தார். அப்போது புவி அமைப்பு சம்பந்தமான பல விஷயங்களை "பிராக்டிகலாக" தெரிந்து கொண்டார். இவர் ஜியாலஜி படித்தபோது பலர் கிண்டல் செய்தார்கள்- வேலை எங்கே கிடைக்கப்போகிறது என்று. ஆனாலும் சோர்ந்து போகாமல் படித்து பட்டம் பெற்றார். இபோது ஸ்காட்லாந்து நாட்டில் கடலில் எண்ணை வளம் கிடைக்கிறதா என ஆய்வு செய்யும் வேலை கிடைத்துள்ளது.

நல்ல சேதி 8-1-2008

மூட்டு மாற்று அறுவை சிகித்சை -சாதனை படைக்கிறது இந்தியா (தினமலர் 8-1-2008 புதுவை பதிப்பு பத்தாம் பக்கம்)
சுருக்கம்: இந்தியாவில் இப்போது ஆண்டுக்கு 50.000 மூட்டு மற்றும் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகித்சை செய்யப்படுகிறது. செலவு செய்யும் வசதியும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் மற்ற நாடுகளை விட திறமை வாய்ந்த அறுவை சிகித்சை நிபுணர்கள் இங்கு அதிகம் உள்ளனர். கட்டணமும் மற்ற நாடுகளை விட குறைவு. ஆகவே வெளி நாட்டினரும் இங்கு வந்து சிகித்சை பெற ஆர்வம் காட்டுகின்றனர். வரும் ஆண்டுகளில் இந்த போக்கு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நல்ல சேதி 7 ஜனவரி 2008

சொந்த கிராமத்தின் தாகத்தை தீர்க்க அமெரிக்காவில் வேலை செய்யும் சிறுவன்.
என ஆரம்பிக்கும் செய்தி (தினமலர்-பாண்டிச்சேரி பதிப்பு- ஜனவரி 7, பக்கம் 12) மகாராஷ்ட்ர மாநில அகோலா மாவட்ட பாரஸ் கிராமத்தை சேர்ந்த ருஜுல், 13 வயது, இப்போது அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் படிக்கிறான். அவன் கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. இதை தீர்க்க ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு செய்தான். மற்ற நண்பர்களுடன் ஆலோசித்து பகுதி நேர வேலை செய்து (கார் சுத்தம் செய்வது, ஐஸ்கிரீம், பிட்சா விற்பது) போன்ற வேலைகளை செய்து பணம் திரட்டி வருகிறான். . “தண்ணீருக்காக பெண்கள் பல மைல்கள் தலையில் பானையை சுமந்து சென்றதை பார்த்து இந்த பிரச்சினை பற்றிய சிந்தனை வந்தது. இந்த வேலையில் வெற்றி பெறும் வரை வேலைகளில் ஈடுபடுவேன்" என்கிறான் இவன்.