மொழி

ஜெருசலேம் : "ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் குழந்தைகளின் மூளை எளிதில் மூப்படையாது' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக் கழகத்தில், மூளை செயல்பாடு தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் வருமாறு: தங்களின் தாய் மொழி தவிர, இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழிகளை பேசும் குழந்தைகள், எதிர்காலத்தில் பல விதத்தில் பயன் அடைவர். பல மொழி பேசும், 75 வயது முதல் 95 வயதிற்கு உட்பட்ட முதியவர்கள் பலரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அதிக மொழி பேசுவோரின் அறிவாற்றல் சிறப் பாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. முதியவர்கள் தெளிவான மன நிலையுடன் உள்ளனர். தாய் மொழி தவிர, இரண்டாவது, மூன்றாவது என பல மொழிகளைக் கற்றதே, அவர்களின் மூளை எளிதில் மூப்படையாததற்கு காரணம்.

6 மறுமொழிகள்:

கீதா சாம்பசிவம் சொல்வது:

//"ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் குழந்தைகளின் மூளை எளிதில் மூப்படையாது' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. //

ஆய்வு எதுவும் இல்லாமலேயே வருஷக்கணக்கா நான் சொல்லிட்டு இருக்கேன், நான் சின்னப் பொண்ணுதான்னு, யார் நம்பினாங்க????? :P ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும்கிறதாலே தானே இது???? :P

கீதா சாம்பசிவம் சொல்வது:

போணியே ஆகலை போலிருக்கு, அது சரி, ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு தனித்தனி ஃபாண்டில் வருதே ஏன்? எனக்கு மட்டும் இப்படித் தெரியுதா? ராஜா ராம் மோகன் ராய் ஒரு ஃபாண்ட், கொசு ஒழிப்பும், அதுக்கு அடுத்ததும் வேறே, அப்புறம் வரதெல்லாம் வேறே, வேறே????????

திவா சொல்வது:

நல்ல விஷயம் எல்லாம் எப்படி போணி ஆகும்? பேசாம இத நிறுத்திடலாம்ன்னு தோணுது.
இப்ப தினமலர் unicode ல வருது. G3 ஒரு பாண்டும் நான் வேற விதமா எழுதினா ஒரு பாண்டும் வருது.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
அளவு மட்டுமே வேறே ன்னு நினைக்கிறேன். பான்ட் ஒண்ணேதான்.

கீதா சாம்பசிவம் சொல்வது:

ithukku kodutha innoru comment engeeeeeeeeeeeeeeeeeee

திவா சொல்வது:

மன்னிக்க! ஒளிஞ்சுகிட்டு இருந்தது . போட்டாச்சு

geethasmbsvm6 சொல்வது:

//மன்னிக்க! ஒளிஞ்சுகிட்டு இருந்தது . போட்டாச்சு//

அதானே, சும்மா விட்டுடுவோமா என்ன????