-வாஷிங்டன்: வானிலை மாற்றத்துக்கு மட்டும் காரணமாக இல்லாமல், சுற்றுச்சூழலை பாதிக்காத "பயோ' எரிபொருள் உற்பத்தி செய்யவும் கடற்பாசி பயன்பட உள்ளது!காட்டாமணக்கு உட்பட, பல தாவரங்கள் மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள இயற்கையான மாற்று எரிபொருள் உருவாக்கும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன. இந்தியாவும் இது போன்ற திட்டங்களில் இறங்கியுள்ளன. கோஸ்ட்டா ரிகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இப்போது, கடற்பாசியில் இருந்து மாற்று எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.கடற்பாசி உற்பத்தி, கடந்த 1950 ல் இருந்து 60 மடங்கு பெருகியுள்ளது. ஆசிய, பசிபிக் கடலில் இருந்து தான் இதன் 91 சதவீத உற்பத்தி கிடைக்கிறது. ஆண்டுக்கு எட்டு கோடி டன் கடற்பாசி ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடற்பாசியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், "பயோ' எரிபொருள் தயாரிக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புது திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடற்பாசி இப்போது உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிராணிகளுக்கு இரையாகவும் , விவசாயத்துக்கு உரமாகவும் கூட பயன்படுத்தப் பட்டு வருகிறது.இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில்," பல நாடுகளில் கடலில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, கடல் வளம் குறைவதுடன் அதன் பயன்பாடும் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் கடல் வளம் பாதிக்காத நிலையில் கடற்பாசியை வளர்த்து அதன் மூலம் எரிபொருளை உற்பத்தி செய்தால் எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க முடியும். உலக வெப்பமயமாதலை குறைக்க முடியும்' என்று தெரிவித்தனர்.
திங்கள், ஜூன் 16, 2008
கடற்பாசியில் இருந்து...
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
திங்கள், ஜூன் 16, 2008
குறிச்சொற்கள் ஊடகத்தில் நல்ல சேதி
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
முதலில் கடலை காப்பாற்ற வேண்டும்.நிலத்தில் வேட்டையாட இடமில்லாமல் பலரும் கடல் பக்கம் போவது மனித இனத்துக்கே துரோகமாக முடியக்கூடும்.
ஆமா! மனுஷன் போகிற எந்த இடம் உருப்பட்டது!
Post a Comment