நல்வரவு!

நேற்று பாண்டிச்சேரியில் நடை பெற்ற பதிவர் பட்டறைக்கு சென்றிருந்தேன். அங்கு ஸ்ரீ சிவகுமார் அறிமுகமானார். அவருடன் உரையாடியபோது பொதுவாக வலைப்பூக்களில் சண்டை சச்சரவுகளே காணப்படுகின்றனவே என்று வருந்தினேன். அவர் பதிலாக நாம் எதைப்பார்க்கிறோம் என்பது நம் கையில் இருக்கிறது. நீங்கள் நல்ல விஷயங்களை வெளியிடுங்களேன், அதுவே தீர்வு என்றார். இது மனதில் தைத்துவிட்டது. ஆகவே இதோ!

செய்தி தாள்கள்/ வலைப்பூக்கள்/ வலைப்பக்கங்களில் மற்ற ஊடகங்களில் அரிதாக பார்க்கும் நல்ல தகவல்கள், நேரில் பார்த்து அனுபவித்த நல்ல சமாசாரங்களை இங்கே வெளியிடுங்க!

தயை செய்து உண்மைத் தகவல்கள் மட்டுமே! இயன்ற இடங்களில் வலைச்சுட்டியும் தொடுப்பும் இடவும். நேரில் பார்த்த சமாசாரமானால் தங்கள் முகவரியையும் தர வேண்டும் (அது வெளியிடப்படாது)

2 மறுமொழிகள்:

கண்மணி சொல்வது:

நல்ல முயற்சி.இன்று தொலைக் காட்சியில் கேட்ட ஒரு நல்ல செய்தியின் அடிப்படையில் என் பதிவு.
சுட்டியைத் தந்திருக்கிறேன்.http://kouthami.blogspot.com/2008/01/blog-post_05.html

திவா சொல்வது:

நண்றி கண்மணி! தொடருங்கள்! உங்கள் சுட்டி பிறர் சமர்ப்பணம் என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.