நல்ல சேதி 15-1-2008

ஆயுதங்களை உதறிய பயங்கரவாதிகள் உள்ளூர் வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள்.

அசாமில் ஆயுதங்களை துக்கி எறிந்துவிட்டு அமைதி வழிக்கு திரும்பியுள்ள போடோ பயங்கரவாதிகள் தங்கள் பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அரசு- தனியார் துறை உதவியுடன் செயல்படுத்தி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் அசாமையே பயங்கரவாதத்தால் கிடுகிடுக்க வைத்தவர்கள் 2003 இல் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஆயுதங்களை விட்ட பின் அதில் இருந்த பலர் தற்போது தன்னாட்சி அதிகார்ம பெற்ற போடோலாண்ட் பிராந்திய கவுன்சிலின் (பி.டி.சி.) உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள பல பகுதிகளில் பள்ளிகள், மின்சார வசதி, தொழிற்சாலைகள் போன்ற வசதிகள் இல்லை. ஆகவே இதற்காக தனியார் துறையுடன் கை கோர்த்து அரசு- தனியார் முதலீட்டில் திட்டங்களை செயல்படுத்த ஈடுபட்டுள்ளனர்.....
மேலும் விரிவான செய்தியை தினமலர் 15-1-2008, 9 ஆம் பக்கத்தில் காண்க

2 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொல்வது:

நல்ல சேதிகளை மட்டும் தொகுத்து வழங்கும் உங்கள் பணி வித்தியாசமாக இருக்கு.

திவாண்ணா சொல்வது:

நன்றி குமார்! சிரமமான வேலையாகத்தான் இருக்கு. தினசரியை எடுத்துக்கொண்டால் சில நாட்கள் இப்படிப்பட்ட செய்தியே இல்லாமல் 3-4 நாட்கள் கழிந்து விடுகிறது. இதற்கு நிறைய செய்தித்தாள்களை பார்க்க வேண்டும். எப்படி செய்வது என்று குழம்பிக்கொண்டு இருக்கிறேன். இயன்றால் பங்களியுங்களேன். ஒவ்வொருவரும் வேறு வேறு செய்தித்தாள்களை படிப்பதால் பலர் சேர்ந்தால் தினசரி ஏதேனும் கிடைக்க வாய்ப்புண்டு.