இரும்பு பட்டறையில் இஸ்ரேல் மாணவர்..

மூணாருக்கு சுற்றுலா வந்தவர் யோனி (29).இஸ்ரேல் நாட்டவர். அனிமேஷன் படிக்கிறார். அவர் தோழி இனபலுடன் சுற்றுலா வந்தார்.
மூணாரில் சுப்பிரமணிய சாமி கோவில் செல்லும் வழியில் இரும்பு பட்டறைப்பணிகளை கூர்ந்து கவனித்தார். பணி அவரை கவர்ந்ததால் பட்டறை உரிமையாளருக்கு குரு தட்சிணை வைத்து பணிகளை கற்று வருகிறார். அடுப்பையும் சூட்டையும் பொருட்படுத்தாமல் ஒரே நாளில் கத்தி செய்ய கற்றுக்கொண்டார்.

நம்மில் எவ்வளவு பேருக்கு இப்படி ஆர்வம் இருக்கிறது?

தினமலர் புதுவை 12-02-2008 பக்கம் 7

2 மறுமொழிகள்:

பிறைநதிபுரத்தான் சொல்வது:

அடுப்பையும் சூட்டையும் பொருட்படுத்தாமல் ஒரே நாளில் கத்தி செய்ய கற்றுக்கொண்டார். -

இஸ்ரேலின் துப்பாக்கி குண்டுகளையும், எரிபடை தாக்குதலை மட்டும் இதுவரை சந்தித்த பாலஸ்தீனிய சிறுவர்கள்-முதியவர்கள் -முதல்முதலாக கத்தியை சந்திக்கப்போகிறார்கள்..

திவா சொல்வது:

//முதல்முதலாக//
????
நிச்சயம் அவர்களுக்கு தெரிந்த தொழில்நுட்பமே! சுட்ட வந்தது அந்த தெரியாததை உரிய மரியாதை தந்து கற்றுக்கொள்ளும் பாங்கை!