குறைந்த செலவிலான ராக்கெட் எரிபொருள்

கொச்சி : குறைந்த செலவிலான, ராக்கெட் எரிபொருள் தயாரிப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரைவிட, குறைவான செலவில் ராக்கெட் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு, திரவ நிலை எரிபொருளும், திட நிலை எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றன.

கிரயோஜெனிக் எரிபொருள் இன்ஜின் வடிவமைப்பதில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பகுதி கிரயோஜெனிக் தொழில்நுட்பம், ராக்கெட் செலுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.இந்த எரிபொருள், மண்ணெண்ணெய் மற்றும் திரவநிலை ஆக்சிஜன் மூலம் உருவாக்கப்படுகிறது. கிரயோஜெனிக் இன்ஜின்களில் திரவநிலை ஹைட்ரஜன் மற்றும் திரவ நிலை ஆக்சிஜன் நிரப்பப்பட வேண்டும். திரவநிலை ஹைட்ரஜன் நிரப்புவது பெரும் சிரமமான காரியமாக உள்ளது.

இதற்கு பதிலாக, மண்ணெண்ணெய் மற்றும் திரவநிலை ஆக்சிஜன் மூலம் உருவாக்கப்படும் லாக்ஸ்-கெரசின் என்ற எரிபொருளை, இன்ஜினில் நிரப்புவதும் எளிது; செலவும் மிகக்குறைவு.மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 18 ரூபாய். திரவ நிலை ஆக்சிஜன் ஒரு லிட்டர் ஆறு ரூபாய். லாக்ஸ் - கெரசின் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவு ஏற்படும். திட நிலை எரிபொருள் ஒரு கிலோவுக்கு 1,500 ரூபாய் செலவு ஏற்படுகிறது.லாக்ஸ் - கெரசின் எரிபொருள் தயாரிப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருந்தாலும், இதை மேலும் நுட்பமாக கையாள்வது குறித்து உக்ரைன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் உக்ரைன் பங்குதாரராக இல்லாவிட்டாலும், பழைய சோவியத் ரஷ்யா கையாண்ட தொழில்நுட்ப முறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகின்றனர்.புதிய எரிபொருள் தயாரிப்பு முழு வெற்றி பெற் றால், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் செலவு பெரிதும் குறையும். 2012ம் ஆண்டை இலக்காக வைத்து, மறுபயன்பாட்டுக்கு தயாரிக்கப்பட்டு வரும் ராக்கெட்டிலும், இதை பயன்படுத்த முடியும்.

4 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொல்வது:

நாம வின்வெளி போக செலவு குறையுமா?

திவாண்ணா சொல்வது:

//நாம வின்வெளி போக செலவு குறையுமா?//
அப்படித்தான் தோணுது!
:-)))))))))))))

இராஜராஜேஸ்வரி சொல்வது:

குறைந்த செலவிலான, ராக்கெட் எரிபொருள் தயாரிப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். //
Thank you for sharing useful news.

அம்பாளடியாள் சொல்வது:

வணக்கம் பயனுள்ள பகிர்வைத்தந்த தங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .
முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கும் .