பறவை நேயம்!

லண்டன்: மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ற பழமொழி, பறவைகளுக்கு பொருந்தாது. தாய்ப் பறவை கற்றுக்கொடுத்தால் மட்டுமே, குஞ்சுகள் பறக்கப் பழகும். தாயை இழந்துவிட்டால்... அதற்கு யாராவது கற்றுக்கொடுக்காவிட்டால், பறக்கத் தெரியாது. இப்படிப்பட்ட நாரைக்கு பறக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார், கேரி ஜாமித் என்ற பறவை ஆர்வலர். பயங்கர சூறாவளியால், நாரை குடும்பம் ஒன்று கூண்டோடு பலியாகிவிட்டது. அதில், ஒரு குஞ்சு மட்டும் பிழைத்துக் கொண்டது. அதை அன்போடு எடுத்து வந்தார், பறவை ஆர்வலர் கேரி ஜாமித். நாரைக்குஞ்சுக்கு தாய் இல்லாததால், அதற்கு பறப்பது எப்படி என்று தெரியாது.


அந்த நாரைக்குஞ்சுக்கு டியூட் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் ஜாமித். டியூட்டுக்கு பறக்கக் கற்றுக்கொடுக்க தினமும் குறிப்பிட்ட நேரம் செலவிட்டார். மெல்ல ஓடி, பிறகு வேகம் பிடித்து, கையை இறகு போல படபடத்து கற்றுக்கொடுத்தார் ஜாமித். இதைப் பார்த்த டியூட்டும், மெல்ல நடந்து, பின் ஓடி, இறகுகளை அடித்து பறக்க முயன்றது. சில நாட்களில், இந்த பயிற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஜாமித்துயுடன் ஓடிய நாரை, மூன்றடி உயரத்துக்கு பறந்தது. பழகப்பழக, பறக்கும் திறன் வந்துவிட்டது. இப்போது 70 அடி உயரத்துக்கு பறக்கிறது டியூட். விரைவில் இதை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட உள்ளார் ஜாமித்.

3 மறுமொழிகள்:

திவா சொல்வது:

என்னமோ போங்க. திடீர்ன்னு நல்ல சேதியா வருது!
ஒரு வாரத்திலே போட நினச்ச சேதி கூட போட முடிலை. இன்னிக்கி வெளியே மட்டுமில்ல நல்ல சேதியிலேயும் மழை!

geethasmbsvm6 சொல்வது:

அட, யாருமே கமெண்டறதில்லங்கறதுக்காக இப்படி ஒரு வழியா? நமக்கு நாமே? திட்டம்???? நல்லா இருக்கு! :P

திவா சொல்வது:

இது ரொம்பவே பழைய வழியாச்சே!