வலைப்பூக்களுக்கு புதுசுனா

சரி எப்படியோ இங்க வந்துட்டீங்க. கொஞ்சம் தலைகால் புரியலே இல்ல?
ஏதேனும் படிக்கிறீங்க. அட, இது நல்லாயிருக்கேன்னு தோணுது. (சும்மா ஒரு பேச்சுக்குதான்!) அத பத்தி ஒரு விமர்சனம் எழுத தோணுது. (ஏண்டா உனக்கு வேற வேலை இல்லையா, ஐயா நான் பார்த்த வலைப்பூக்களிலேயே இதுதான் பிரமாதம்! இப்படி ஏதோ ஒண்ணு) என்ன செய்யறது?
நீங்க படிச்ச பத்தி கீழேயே காமென்ட்ஸ் அப்படி தெரியுது பாருங்க. அது மேலே சொடுக்கினா (அதாங்க மவுஸால கிளிக் பண்ணா) அடுத்து ஒரு பக்கம் வரும். மத்தவங்க திட்டினது பாராட்டினது எல்லாம் அங்க இருக்கும். அது பாட்டுக்கு வால் மாதிரி (க்கும்) போய்கிட்டே இருந்தாலும் கவலைபடாம வலது பக்கம் பாருங்க. அங்க ஒரு பெட்டி தெரியுதா? மேலே ஆங்கிலத்துல லீவ் யுவர் காமென்ட்ஸ் அப்படி போட்டிருக்கே. அந்த பெட்டில உங்க விமர்சனத்தை உள்ளிடுங்க. தமிழ்ல எழுதறது நல்லது. அதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். முதல் பக்கமே தமிழில் தட்டச்சி பின்னூட்ட ன்னு ஒரு தொடுப்பு கொடுத்திருக்கேனே. அங்க போய் சுலபமா தமிழ்ல எழுதலாம். ammaa ன்னு அடிச்சா "அம்மா" வந்துடும். அப்புறம் அத பிரதி எடுத்து ஒட்ட... அதாங்க காபி பேஸ்ட் .. பண்ணிடலாம்.
மத்தபடி இடது பக்கம் முதல்ல என் இன்னொரு வலைப்பூக்கான தொடுப்பு, கீழே இந்த வலைப்பூல இருக்கற மத்த பதிவுகள் தலைப்புவாரியாக, ஏன் இந்த வலைப்பூ ங்கற ரகசியம், இன்னும் கீழ இதுவரை பதிவு செய்தன் எல்லாம் தேதிவாரியாக, அப்புறம் அடியேனின் சிறு விவரம். அவ்வளவுதாங்க. இதுவரைக்கும் படிச்சதுக்கு நன்றி!

2 மறுமொழிகள்:

கீதா சாம்பசிவம் சொல்வது:

"ammaa" னு இரண்டு "ஏ" போடணும், இல்லைனா அம்ம னு வரும்! :D
அது சரி, 53, உங்க வயசா? :)))))))

திவா சொல்வது:

அக்காவுக்கு நல்வரவு!
உண்மைதான். தவறை சுட்டிகாட்டியதுக்கு நன்றி! திருத்திவிடுகிறேன். (அப்ப கூட திருந்தி விடுகிறேன்னு சொல்லல பாத்தீங்களா?)

53 வயசேதான்! ஏன் அத போட்டேன்னு இப்ப புரியல. வலைப்பூ எனக்கு புதிசு. அதனால இருக்கலாம்.