நல்ல சேதி2, 29-01-2008

ஆந்திர நடிகர் டாக்டர் ராஜசேகர் சமீபத்தில் நிருபர்களிடம் பேசும்போது ஒரு கருத்து தெரிவித்தார். சமீபத்தில் அரசியலில் குதித்த நடிகர் சிரஞ்சீவிக்கு "அனுபவம் போதாது" என்றும் "அவர் கட்சி துவக்கினாலும் நான் அதில் சேர மாட்டேன்" என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த "சிரஞ்சீவியின் ரசிகர்கள்" சிலர், ராஜசேகர் தன் குடும்பத்துடன் ரயில் நிலையத்திலிருந்து காரில் வீட்டுக்கு திரும்பும் போது உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கினர். காயமடைந்த ராஜசேகர் குடும்பத்தினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகித்சை பெற்றனர்.

நல்ல சேதி இங்குதான் வருகிறது.

இதை கேள்விப்பட்டு சிரஞ்சீவி ராஜசேகரின் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வரும்போது நிருபர்களிடையே பேசும்போது "துரதிஷ்டவசமான இந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. எவருக்கும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முழு உரிமை ஜனநாயகத்தில் உண்டு. இந்த செயலில் யார் ஈடு பட்டிருந்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.
இது ஒரு செட் அப் இல்லை என்றே நம்புவோம்!

தினமலர் புதுவை 29-01-2008 பக்கம் 9

5 மறுமொழிகள்:

Anonymous சொல்வது:

//இது ஒரு செட் அப் இல்லை என்றே நம்புவோம்!//

நல்ல சேதி சொல்லும்போது முழு மனதோடு சொல்லுங்ங்கப்பா! ;-)

திவாண்ணா சொல்வது:

வாங்க அனானி!
யாரும் இதெல்லாம் செட் அப் இல்லையான்னு பின்னூட்டம் போட்டா என்ன செய்யறது. அதுக்குத்தான்....
போற போக்கை பாத்தா இப்படியாவது பின்னூட்டம் வராதா ன்னு கேக்கறீங்க. ம்ம் அதுவும் சரிதான்!
:)

வடுவூர் குமார் சொல்வது:

சிரஞ்சீவிக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும்-அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொல்வது:

மெய்யாலுமே நல்ல செய்தி தான் திவா!

//இது ஒரு செட் அப் இல்லை என்றே நம்புவோம்!//

செட் அப்-ஆகவே இருந்தாலும் வெளிப்படையா மன்னிப்பு-ன்னு கேட்க ஒரு பக்குவம் வேணும்-ல! அந்த விசயத்துக்காகவாவது சிரஞ்சீவியைப் பாராட்டலாம்!

திவாண்ணா சொல்வது:

வாங்க குமார்.
அரசியலுக்கு வருவதாகத்தானே சிரஞ்சீவி சொல்றார்!
உண்மையாகவே இப்படி நடஎது கொண்டால் அது ஆரோகியமான அரசியலுக்கு வழி வகுக்கும். ஆனா...எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியுமோ!

@ கண்ணபிரான்
நல்வரவு!
ஆமாம், செய்த தப்பை ஒத்துக்கொள்ளவும் (இந்த நிகழ்வில் பொருத்தவில்லை) மன்னிப்பு பகிரங்கமாக கேட்கவும் எல்லாருக்கும் தைரியம்/ பக்குவம் வருவதில்லை. பாராட்டுக்கு உரியதுதான். அதனாலேயே இந்த பதிவில் வெளியிட்டேன்.