பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு

விசில் அடித்து மாணவர்களை திரட்டும் தலைமை ஆசிரியர்.
மே.வங்கம் மிட்னாபூர் அருகே காடல் அருகே சாதிசாக் கிராமம். ஆரம்பப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் பிரணாய் கிருஷ்ணா பட்டாச்சாரியா. 7 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பு ஏற்றவர். தொடர்ந்து மாணவர் வருகையை சோதித்ததில் சாவகாசமாக மதியம் வருகிறார்கள் என தெரிந்தது. காரணம் விசாரித்ததில் அனைத்து மக்களும் படிப்பறிவு இல்லாதவர்கள், மணி பார்க்கக்கூட தெரியாது, கடிகாரமும் கிடையாது என கண்டு பிடித்தார். இதை சரி செய்ய தினமும் காலை 9-30 க்கு சைக்கிளில் கிராம தெருக்களில் விசில் ஊதியபடி வலம் வருவார். மக்கள் நேரம் ஆகி விட்டது என உணர்ந்து மாணவர்களை தயார் செய்து அனுப்புவர். இப்படி மெனக்கெடுவது பள்ளியில் படிக்கும் சுமார் 200 மாணவர்களை நெகிழச்செய்துள்ளது. தாங்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த வேலையை தாமே செய்ய உறுதி கொண்டு உள்ளனர்.
குழந்தைகள் தினமும் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு தயார் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வானொலியில் தினசரி காலை "பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு" என்ற பாடலை ஒலிபரப்புகின்றனர்.
புதுவை தினமலர் 19-02-2008 பக்கம் 12

0 மறுமொழிகள்: