அமெரிக்காவில் கால் பதிக்கும் இந்திய நிறுவனம்

அமெரிக்க வாகன உற்பத்தித் துறையில் கால் பதிக்கும் முதல் இந்திய நிறுவனம் இது. ஒவ்வொரு ஆண்டும் புது ரக வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது மகிந்திரா நிறுவனம். சமீபத்தில் அறிமுகமாகன ஸ்கார்பியோ, பெலிரோ ஜீப் கார்கள் விற்பனை, கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கார்கள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சென்னையில் தயாரிக்கும் ரெனால்ட் லோகன் ரக கார்கள், இந்தியாவில் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவையும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. புதிதாக அறிமுகமாகும் இங்கினியோ விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.எரிபொருள் விலை அதிகரித்ததை தொடர்ந்து, வாகன விற்பனை அமெரிக்காவில், 1.66 கோடி வாகனங்களில் இருந்து, கடந்த ஆண்டு 1.61 கோடி வாகனங்களாக குறைந்துள்ளது. இருப்பினும், சர்வதேச அளவில், அமெரிக்கா தான் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.இதனால், அமெரிக்காவின் வாகன விற்பனையில் போட்டியிட முடியும் என்று மகிந்திரா நிறுவனம் நம்புகிறது. பாகங்களை ஒன்று சேர்த்து முழுமைப்படுத்தும் தொழிற்சாலைகளை, அமெரிக்காவில் துவக்க முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்கள் அல்லது சிகாகோவில் இந்த தொழிற்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து இது துவக்கப்படும். இது தொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது. தொழிற்சாலைக்கான நிலம் குறித்தும் பேச்சு நடக்கிறது.இந்த தொழிற்சாலையில், ஸ்கார்பியோ, இக்னியோ, ஸ்போர்ட்ஸ் ரக கார்கள், பயணிகள் மற்றும் சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன
-----------
http://dinamalar.com/

1 மறுமொழி:

வடுவூர் குமார் சொல்வது:

வெற்றிக்கொடி நாட்ட வாழத்துக்கள்.