தலை வழுக்கை -க்ளோனிங்

இது உடனேயே சகாய செலவில் வராதுதான்! இருந்தாலும் ஒரு வழி வந்திகிட்டு இருக்கு। கொஞ்சம் நம்பிக்கையோட இருக்கலாம்!
--------
லண்டன்: தலை வழுக்கையாகி விட்டதே என்று இனி கவ லைப்பட வேண்டாம்; இதுக் கும் குளோனிங் சிகிச்சை முறை வந்து விட்டது।தலை முடி உதிர்வதற்கும், வழுக்கையாவதற்கும் பல காரணங்கள் உண்டு। சில நோய்கள் காரணமாக கூட முடிகள் உதிரும்.மரபு வழியாகவும் வழுக்கை ஏற்படும்; ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையினரில் சிலருக்கு வழுக்கை ஏற்பட் டால், மூன் றாவது தலைமுறையில் உள்ள சிலருக்கு வழுக்கை வரலாம். இப்படி பல காரணங் களால் ஏற்படும் வழுக்கை தீரவும் இப்போது நவீன சிகிச்சை முறை வந்துவிட்டது.

இன்டர்சைடெக்ஸ் முறை: உடலில் ஏற்படும் கோ ளாறுகளுக்கு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை உள்ளது போல, தலைமுடிகளை மீண் டும் உருவாக்கவும், நகல் எடுக் கும் முறை வந்துவிட்டது. ஒன்றை போலவே இன் னொன்றை உருவாக்கும் மருத்துவ முறை தான் குளோனிங் என்பது. முதன் முதலில் ஆட்டின் செல்லில் இருந்து, அதைப் போலவே இன்னொரு ஆட்டை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்தனர். இந்த குளோனிங் முறை இப்போது தலைமுடிகளை உருவாக்குவதற்கும் வந்துவிட்டது.


பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த இன்டர்சைடெக்ஸ் என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்த முறையை வர்த்தக ரீதியாக செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. விஞ்ஞானிகள் ஆராயச்சிக்கு பின் வர்த்தக ரீதியாக பயன்படுத்த உள்ள இந்த முறைக்கு, "பாலிகியூலர் செல் இம்ப்ளேன்டேஷன்' என்று பெயர். தலையில் அடித்தோலில் முடி வேர்களை இழப்பதால் தான் வழுக்கை ஏற்படுகிறது.


இதனால், மீண்டும் முடிகளை வளர்க்க குளோனிங் முறையில் நடவடிக்கை மேற் கொள்ள முடியும். தீயினால் முடிகள் இழப்பு, நோயினால் முடி கொட்டுவது போன்ற காரணங்களால் வழுக்கை ஏற்படுவோருக்கும் இந்த நவீன சிகிச்சை முறை கைகொடுக்கும்.தலையில் உள்ள செல்களில் செய்யப்படும் இந்த புது முறை சிகிச்சையில், மயிர்க் கால்களில் இருந்து புதிய முடிகள் உருவாக்கப்படுகிறது. வழுக்கை ஏற்பட்ட ஐந் தாண்டுக்குள் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் முடிகளை மீண்டும் வளர்த்துக் கொள்ள முடியும்.

2 மறுமொழிகள்:

R.DEVARAJAN சொல்வது:

அரிய செய்தி தரும் அன்பரே,
பிற்காலப் பாண்டிய மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறேன். தாங்களும் உதவ இயலுமா ?
தேவராஜன்

திவாண்ணா சொல்வது:

மன்னிக்க வேண்டும். எனக்குஅதில் கொஞ்சம் கூட திறமை இல்லை. வேறுவிதத்தில்உதவ முடியுமானால் சொல்லுங்கள்.