நல்ல சேதி3, 05-05-2008

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள செட்டி நாடு பங்களாக்களை புதுப்பிக்க அவற்றை யுனஸ்கோ நிறுவனம் தத்தெடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், செட்டி நாடு, கானாடு காத்தான், காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அந்தக் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 90 க்கும் மேற்பட்ட மாபெரும் மாளிகைகள் உள்ளன.

செட்டி நாட்டு கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இவை உள்ளன. கடல் போல பரந்து விரிந்து கிடக்கும் இந்த மாளிகைகள் இன்று கவனிப்பாரின்றி, பராமரிப்பின்றி பொலிவிழந்து கிடக்கின்றன. பல வீடுகள், சேதம் அடைந்துள்ளன, சேதமடைந்து வருகின்றன.

இந்த பங்களாக்கள் குறித்த ஆய்வில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இவற்றின் தொன்மையை அறிந்த யுனஸ்கோ நிறுவனம் அந்த பங்களாக்களை பழைய அழகு குறையாமல் புதுப்பிக்க தத்தெடுத்துள்ளது.

இது குறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில், 2007 ம் ஆண்டு கானாடுகாத்தான் உள்பட சுமார் 100 பாரம்பரியம் மிக்க நகரங்களை யுனஸ்கோ தேர்வு செய்துள்ளது.

இந்த பங்களாக்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை யுனஸ்கோ அமைப்பினரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/02/tn-unesco-to-protect-chettinad-buildings.html

0 மறுமொழிகள்: