நல்ல சேதி 03-02-2008

லியோ பியால்கோ; வயது 92. மாகுலர் டீஜெனரேஷன் ஆல் பார்வை குறைவு ஏற்பட்டு வலது கண்ணில் ஓரப்பார்வை மட்டும் உள்ளது. இடது கண் பார்வை இல்லை. 60 வருடங்களாக கால்ப் ஆடுகிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் 70 வயதுக்கு மேற்பட்ட சகாக்களுடன் கால்ப் ஆடப்போய் விடுவார். அமேரிக்காவில் ப்ளாரிடா, க்ளியர்வாட்டர், கோவ் கே கன்ட்ரி கிளப்பில் ஜனவரி 4 ஆம் தேதி ஆடும்போது ஒரே அடியில் பந்தை 110 கஜம் தூரத்தில் உள்ள குழியில் வீழ்த்தினார்! (இது தேர்ந்த கால்ப் வீரர்கள் கூட அரிதாகவே செய்வது!) சக வீரர் கெரிங்க் அதைப்பற்றி கூறும்போது " அவர் அதற்கு அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர் மனைவியிடம் சொல்லக்கூட நாங்கள் தூண்டி விட வேண்டி இருந்தது" என்றார். கிளாப்பில் நன்பர்கள் அவருக்கு பரிசு அளித்து கௌரவித்தனர்.
டெக்கான் கிரானிகிள் 03-02-2008 பக்கம் 12

2 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொல்வது:

60 வருடங்களாக கால்ப்பா?
நிறைய இதுக்கே செலவு செய்திருபார் பொல் இருக்கு?

திவா சொல்வது:

வாங்க குமார்! இருக்கறது அமேரிக்கா. அப்புறம் செலவுக்கென்ன? இல்லைனா கடன் வாங்கி செலவு பண்ணலாம்! :-)