மும்பை: டில்லியை அடுத்து, சென்னையில் இ - செக்' முறை அமலுக்கு வருகிறது. காசோலை, கிளியர்' ஆவதற்கு மூன்று நாள் ஆகும் நிலை போய், மின்னணு முறையில், மூன்று மணி நேரத்தில், கிளியர்' ஆகி விடும்.
அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த, எலக்ட்ரானிக் செக்' முறை தான் அமலில் உள்ளது. அதனால், எவ்வளவு தூரமாக இருந்தாலும், ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, இன்னொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்ற சில மணி நேரமே பிடிக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு மிக சுலபமாக, தங்களின் செக்'குகளை மாற்ற முடிகிறது.
வங்கிகளில், செக் பரிமாற்றத்துக்கு இப்போது கடைபிடிக்கும் முறைக்கு, மேக்னடிக் இங்க் கேரக்டர் ரெகக்னேஷன்' (எம்.ஐ.சி. ஆர்.,) என்று பெயர். இதில் காகித வடிவில் காசோலையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த காசோலையை பரிசீலித்து, அந்த காசோலை உண்மையானது தான் என்பதை வங்கி உறுதி செய்து கொண்டு, செக் போக வேண்டிய குறிப்பிட்ட வாடிக்கையாளர் கணக்கு உள்ள வங்கிக்கு அனுப்பும். அந்த வங்கி அந்த காசோலையை வாங்கி, வாடிக்கையாளர் கணக்கில் சேர்க்கும். இதற்கு மூன்று நாட்கள் பிடிக்கும். உள்ளூர் காசோலையாக இருந்தால், 24 மணி நேரம் பிடிக்கும்.
மின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கையாளப்படும் , இ- செக்' பரிமாற்றம், செக் ட்ரன்கேஷன் சிஸ்டம்' (சி.டி.எஸ்.,) முறை மூலம் கையாளப்படுகிறது. இப்போதுள்ள நடைமுறை போல, காசோலையை காகித வடிவில், வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக்கு சென்று, இ -செக்' கை போட்டால், போதும், வாடிக்கையாளர், தான் யாருக்கு அனுப்ப விரும்புகிறாரோ அவர் கணக்குக்கு பணத்தை வங்கி அனுப்பி விடும். இதற்கு மூன்று மணி நேரம் தான் ஆகும்.
டில்லியில், ஒரு மாத சோதனைக்கு பின், அமல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஐசிஐசிஐ.,வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி, பேங்க் ஆப் அமெரிக்கா, கரூர் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் 72 கிளைகளில், இ - செக்' முறை அமலுக்கு வந்துள்ளது.விரைவில், மும்பை மற்றும் சென்னையில், இந்த புதிய முறையை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் இந்த இ - செக்' முறை அமல்படுத்தப்பட்டால், அதிகம் பேருக்கு பலன் கிடைக்கும். காசோலை கிளியர்' ஆவதற்கு தாமதம் ஆவதும் குறையும்; வாடிக்கையாளர்களுக்கும் நேர, பணம் இழப்பு ஏற்படாது' என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.
தின மலர் ஈபேப்பர் 06-02-2008
நல்ல சேதி பிப் 6, 2008
பதித்தவர் திவாண்ணா இந்த நேரத்தில்
குறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment